ஆழி விமர்சனம்

மாதவ் ராமதாசன் இயக்கத்தில், ஆர்.சரத்குமார், இந்திரஜித் ஜகஜித், தேவிகா சதீஷ், வையாபுரி, ஸ்ரீஜித் ரீவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு,‌ பிஜு மாவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் ஆழி. 

சரத்குமார் மீன்பிடிக்கும் படகு மெக்கானிக்காக வேலை செய்து கொண்டே போதைப்பொருள் விற்பனை ஆயுதம் கடத்தல் போன்ற பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மிகவும் பணக்காரராகவும் இருந்து வருகிறார் அவருக்கு ஒரே மகள் தேவிகா சதீஷ்.

சரத்குமாரின் மகளான தேவிகா சதீஷ் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவரான இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். இந்திரஜிதும் தேவிகாவை மனதார காதலிக்கிறார்.

மகள் தேவிகாவின் காதல் சரத்குமாருக்கு தெரிய வருகிறது அதனால் இந்திரஜித் மீது கோபம் கொள்ளும் சரக்குமார் அவரை போட்டில் கடத்தி ஆழ்கடலுக்கு சென்று விடுகிறார். அங்கு வைத்து எந்திரத்தை கொலை செய்து விட வேண்டும் என்று திட்டமிடுகிறார். 

சரத்குமாரின் திட்டம் பலித்ததா? இல்லையா? இந்திரஜித் சரத்குமாரிடமிருந்து தப்பித்தாரா? இல்லையா? தேவிகாவும் இந்திரஜித்ம் சேர்ந்தார்களா? இல்லைய என்பதே ஆழி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : மாதவ் ராமதாசன்

தயாரிப்பு : சஜித் கிருஷ்ணன் 

ஒலி வடிவமைப்பு : ரசூல் பூக்குட்டி

ஒளிப்பதிவு : ஆனந்த் என் நாயர்

எடிட்டர் : கே.ஸ்ரீனிவாஸ்

பாடல்கள் : ஜாஸ்ஸி கிஃப்ட்

பாடல் வரிகள் : நவின் கண்ணன்

கலை : பிரதீப்.எம்.வி

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்