எல் ஆர் சௌந்தரபாண்டியன் இயக்கத்தில், ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா, பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் போர்த் ஃப்ளோர்.
மும்பையில் ஐடி துறையில் வேலை செய்யும் ஆரி அர்ஜுனன் பணியிட மாற்றம் பெற்று சென்னைக்கு வருகிறார். அங்கே சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யாரும் வசிக்காத நான்காவது மாடியில் உள்ள வீட்டில் குடியேறுகிறார்.
அந்த சமயத்தில் தன்னுடைய பணியுடன் சேர்த்து தன்னை காப்பாற்றும் படி தொலைபேசியில் பேசிய தன்னுடைய முன்னாள் காதலியை தேடும் வேளையிலும் ஈடுபடுகிறார்.
அப்படி ஒரு நாள் அவர் தங்கியிருக்கும் வீட்டில் அவருடைய முன்னாள் காதலியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அது மட்டும் இல்லாமல் இரவு நேரத்தில் பல அமானுஷ்யங்கள் ஏற்பட்டு கனவால் பாதிப்படைகிறார்.
அது ஏதோ கனவாக இல்லாமல் நிஜத்தில் நடப்பது போலே அந்த சம்பவங்கள் அனைத்தும் தன்னை சுற்றி நடக்கிறது என்று யூகிக்கும் ஆரி, ஏன் அப்படி கனவுகள் வருகிறது? எதனால் இப்படி ஒரு அமானுஷ்யங்கள் ஏற்படுகின்றன? அவருடைய முன்னாள் காதலியை தேடி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே போர்த் ஃப்ளோர் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : ஏ ராஜா
இயக்கம் : எல் ஆர் சுந்தரபாண்டியன்
இசை : தரண்குமார்
ஒளிப்பதிவு : ஜே லக்ஷ்மன்
படத்தொகுப்பு : ராம் சுதர்சன்
மக்கள் தொடர்பு : ராஜா

