ஆர் மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்ஜெயன், முத்துபுவன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லவ் ஷேர் சப்ஸ்கிரைப்.
நாயகி சிம்ரன் அம்மா இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் பணக்கார பெண்மணியாக வளர்கிறார். தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நாயகனான ஆதவ் கிருஷ்ணாவை சிம்ரன் காதலிக்கிறார்.
நாயகன் ஆதவோ படிப்பில் மட்டுமே காணும் செலுத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் சிம்ரனின் காதலை ஏற்றுக் கொண்டு அவரும் காதலிக்க தொடங்குகிறார். இவரின் காதல் இப்படி போய்க்கொண்டிருக்கும் சமயத்தில் ஆதவன் பெற்றோரை சந்தித்து பேசி மகிழ்கிறார் சிம்ரன்.
அந்த சமயத்தில் ஆதவின் பெற்றோரான வினோதினி மற்றும் படவா கோபியிடம், சிறுவயதில் தன்னுடைய அப்பாவையும் தன்னையும் விட்டு பிரிந்து சென்ற தன்னுடைய அம்மாவை சந்திக்க விரும்புவதாகும் அதற்காக ஆதவை உடன் அழைத்துச் செல்வதாகவும் அவர்களிடம் ஒப்புதல் கேட்கிறார்.
அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவிக்க ஆதவ் கிருஷ்ணாவும் சிம்ரனும் அம்மாவை சந்திப்பதற்காக காசிக்குப் போகிறார்கள்.
அங்கே ஆகவே நீ இங்கே இரு நான் சென்று அம்மாவை பார்த்து வருகிறேன் அம்மா என்னை தனியாக தான் வர சொன்னார் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
அப்படி அம்மாவை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி சென்ற சிம்ரன் மீண்டும் வரவில்லை. சிம்ரனை தேட ஆரம்பிக்குகிறார் ஆதவ் கிருஷ்ணா. அதன் பிறகு என்ன நடந்தது? சிம்ரன் எங்கே மாயமானார்? அவர்கள் இருவரும் மீண்டும் தேர்ந்தார்களா? இல்லையா? இதனால் என்னென்ன பிரச்சினைகளை ஆதவ் கிருஷ்ணா சந்தித்தார்? என்பதே லவ் ஷேர் சப்ஸ்கிரைப் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : ஆர் மகாலட்சுமி முருகன்
தயாரிப்பு : ஜே பி பிலிம்ஸ், ஜோன்ஸ் ப்ரசன்ஸ் பி ரகு
இசை : அஸ்வமித்ரா
ஒளிப்பதிவு : என்.எஸ் சதீஷ்குமார் படத்தொகுப்பு : ஸ்ரீகாந்த் என்.பி
கதை மற்றும் வசனம் : அசோக் அமிர்தராஜ்

