கப்புள் பிரண்ட்லி விமர்சனம்

அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில், சந்தோஷ் ஷோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி, ராஜீவ் கனகலா, லிவிங்ஸ்டன், கோபராஜு ரமணா மற்றும் பல நடிப்பில் வெளிவந்துள்ள படம் கப்புள் பிரண்ட்லி.

நாயகன் சந்தோஷ் இன்டீரியர் டெகரேஷன்  படிப்பை படித்துவிட்டு அதற்கான பணியை தேடுவதற்காக சென்னையில் வாழ்ந்து வருகிறார். சந்தோஷின் வாழ்க்கையில் வறுமை சூழ்ந்து கொண்டு உள்ளது.

இதனால் வேலை தேடிக் கொண்டே ரேபிட்டோ ஓட்டிக்கொண்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அதே போல் சென்னையில் மகளிர் விடுதியில் ஐடி துறையில் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்று கதாநாயகி மானசா கனவோடு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் இருவரும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவரும் ஒரே வீட்டில் தங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. 

மானசாவை சதித்த பின்பு சந்தோஷின் வாழ்க்கையில் அவருடைய கனவு நிறைவேறி நல்ல நிலைக்கு வருகிறார்.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்குகிறார்கள். அந்த சமயத்தில் அவர்கள் வாழ்வில் ஒரு பெரிய சோகம் ஏற்படுகிறது. அந்த சோகத்தில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை கப்புள் பிரின்லி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : அஸ்வின் சந்திரசேகர் 

ஒளிப்பதிவு : தினேஷ் புருஷோத்தமன் படத்தொகுப்பு : கணேஷ் சிவா 

இசை : ஆதித்யா ரவீந்திரன் 

தயாரிப்பு : அஜய்குமார் ராஜூ பி 

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2 Media)