ஸ்வீட்டி நாட்டி கிரேசி விமர்சனம்

ராஜசேகர் இயக்கத்தில், திரிகுண், ஸ்ரீஜித்தா கோஷ், இனியா, ராதா, தம்பி ராமையா, சத்யன், ரவி மரியா, ஆலி ஜாவா சுந்தரேசன், மதன் பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஸ்வீட்டி நாட்டி கிரேசி.

திரிகுணும் ஸ்ரீஜித்தா கோஷும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் இடையே ஏற்படும் நட்பு சில நாட்களில் காதலாக மாறுகிறது. 

காதல் ஒரு கட்டத்தில் காமத்தில் முடிகிறது.

நாயகன் திரிகுணோ ஏற்கனவே அக்கா  வயதிருக்கும் பெண்ணிடமும் ஆண்டி  வயதிருக்கும் பெண்ணிடமும் காமத்தில் ஈடுபட்டதை தன்னுடைய காதலியிடம் சொல்லிவிடுகிறார்.‌ இதனால் கோபமடையும் காதலி இவனை திருமணம் செய்து திருத்த வேண்டும் என்று திருமணம் செய்து கொள்கிறார். 

திருமணம் செய்து கொண்டு தன்னுடைய கணவனை அழைத்துக் கொண்டு கோத்தகிரியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் நாயகி. 

யாருமே இல்லாமல் அனாதையாக இருந்த தனக்கு குடும்பம் கிடைக்கப் போகிறது அந்த குடும்பத்தை பார்க்க ஆவலோடு செல்கிறார் த்ரிகுண்.‌ அங்கு சென்றதும் தன் மனைவியின் அக்காவான இனியாவையும் அம்மாவான ராதாவையும் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார் திரிகுண்.

திரிகுண் அதிர்ச்சி அடைந்த காரணம் என்ன? அவர்களால் திரிகுணுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? என்பதே ஸ்வீட்டி நாட்டி கிரேசி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : ராஜசேகர் ஜி 

இசை : அருணகிரி 

ஒளிப்பதிவு : சி விஜய்

படத்தொகுப்பு : கே குமார்

தயாரிப்பு : அருண் விஷால் & கோவை ரமேஷ்

மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்