ரெட் லேபில் விமர்சனம்

கே ஆர் வினோத் இயக்கத்தில், லெனின், அஸ்மின், ஆர் வி உதயகுமார், முனிஷ்காந்த், அனுமோகன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரெட் லேபில்.

நாயகன் லெனின் கல்லூரி காலத்தில் அடிதடி என்றும் போலீசில் வழக்கு என்றும் இருந்து, கல்லூரி படிப்பு முடிந்த பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேலை காதல் என்று வாழ்ந்து வருகிறார்.

அந்த சமயத்தில் அதே கல்லூரியில் மாணவர்களின் தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் போட்டியிடும் மாணவருக்கு உதவி புரிவதற்காக தன்னுடைய நண்பர் மூலம் கல்லூரிக்குள் மீண்டும் வருகிறார்.

அப்படியே அந்த மாணவருக்கு உதவி செய்யும் சமயத்தில், தன் காதலியின் மாமாவை கொலை செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

ஏற்கனவே பல வழக்குகள் இருந்து வரும் சூழ்நிலையில் மீண்டும் ஒரு வழக்கு வந்தால் சிறைக்குச்  செல்வது உறுதி ஆகிவிடும் என்பதால் அந்த கொலை குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக தனது காதலியும், சில நண்பர்களுடனும் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார். 

இந்த சமயத்தில் கொலை செய்யப்பட்டவரை, வேறு யாரையோ கொலை செய்த குற்றத்திற்காக அவரைத் தேடி கல்லூரிக்குள் போலீஸ் வருகிறது. 

போலீஸ் ஒருபுறம் தேட, அவருடைய ஆட்களும் ஒரு புறம் தேடுகிறார்கள். இவர்களிடம் லெனின் மாட்டாமல் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றி தப்பித்தாரா? இல்லையா? என்பதே ரெட் லேபிள் படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : லெனின் 

இயக்கம் : கே ஆர் வினோத் 

இசை : கைலாஷ்மேனன் 

படத்தொகுப்பு : லாரன்ஸ் கிஷோர் 

மக்கள் தொடர்பு : ஸ்ரீதர் ராஜு &  உதயகுமார் &  ஹரி பாபு