ஏ ஆர் ஜீவா இயக்கத்தில், அனுபவமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன், விநாயக ராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா, ஜீவா மற்றும் பல நடிப்பில் வெளிவந்துள்ள படம் லாக்டவுன்.
அப்பா சார்லி, அம்மா நிரோஷா, தங்கை, பாட்டி இவருடன் வாழ்ந்து வருகிறார் நாயகி அனுப்பமா பரமேஸ்வரன். படித்து முடித்து இரண்டு வருடங்களாகியும் பல கம்பெனிகளில் நேர்முகத் தேர்விற்கு சென்றும் இரவு நேர வேலை கிடைத்தால் அவருடைய வீட்டில் அனுமதிக்க படாததால் வேலை தேடிக் கொண்டே இருந்து வருகிறார்.
ஒரு நாள் தனது தோழியிடம் வேலைக்காக கேட்கும் சமயத்தில் தோழியுடன் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறார். அங்கு மது அருந்திவிட்டு ஜாலியாக ஆட்டம் பாட்டம் என இருந்து போதை அதிகமாகி மயங்கி விடுகிறார்.
மறுநாள் காலையில் போதை ஒரு அளவுக்கு தெளிந்து வீட்டிற்கு வந்து விடுகிறார் அனுபமா பரமேஸ்வரன்.
சில நாட்கள் ஆனா நிலையில் அனுபமாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவரிடம் செல்கிறார்.
அனுபமாவை பரிசோதனை செய்த மருத்துவர் சிலர் டெஸ்டுகளை எடுக்க சொல்கிறார். அதன்பிறகு அனுபமா கருத்தரித்து இருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.
அதனை கேட்டு அதிர்ச்சி அடையும் அனுபமா வீட்டிற்கு தெரியாமல் அதனை கலைப்பதற்கு முயற்சி செய்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை கண்டறிந்தாரா? இல்லை கருவை கலைத்து விட்டாரா? அனுபமாவின் குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரிந்ததா? இல்லையா? ஊரடங்கால் அனுப்புமாவின் நிலை என்ன ஆனது என்பதே லாக்டவுன் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து இயக்கம் : ஏ ஆர் ஜீவா
ஒளிப்பதிவு : கே ஏ சக்திவேல்
படத்தொகுப்பு : வீஜே சாபு ஜோசப்
இசை : என் ஆர் ரகுநந்தன் & சித்தார்த் விபின்
தயாரிப்பு : சுபாஷ்கரன்
மக்கள் தொடர்பு : சதீஷ் S2Media

