குகன் சக்கரவர்த்தியார் இயக்கத்தில், குகன் சக்கரவர்த்தியார், பொன்னம்பலம், நலினா, வையாபுரி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வங்காள விரிகுடா ஒரு நில மன்னர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ள தொழில் அதிபராக இருக்கிறார் நாயகன் குகன் சக்கரவர்த்தி.
திருமண வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் மனம் உடைந்து கடற்கரையில் சோர்ந்து உட்கார்ந்து இருக்கும் சமயத்தில் அவருடைய முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சி செய்வதை பார்த்து அவரை காப்பாற்றுகிறார்.
தன்னுடைய முன்னாள் காதலி தன் திருமண வாழ்க்கையில் சரியாக இல்லாததை தெரிந்து குகன் சக்கரவர்த்தி அவருடைய கணவரை கொலை செய்துவிட்டு அவருடன் வாழவும் ஆரம்பிக்கிறார்.
குகன் சக்கரவர்த்தியால், கொலை செய்யப்பட்ட நபர் காதலியை தொலைபேசியில் மிரட்டுகிறார். இறந்தவர் எப்படி தொலைபேசியில் பேச முடியும் என்ற குழம்பிக் கொண்டிருக்கும் சமயத்தில், அவரை பயப்பட வைக்கும் சில சம்பவங்கள் நடந்தேருகிறது.
இதனால் தன்னுடைய காதலியையும் தன்னையும் மிரட்டும், அச்சமடைய வைக்கும் நபர் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? அந்த நபரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே வங்காள விரிகுடா படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : குகன் சக்கரவர்த்தி
இயக்கம் : குகன் சக்கரவர்த்தி
இசை : குகன் சக்கரவர்த்தி
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

