டாக்டர் பிரகாபல் இயக்கத்தில், யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி, காளி, மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவிச்சந்திரன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஜாக்கி.
ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் நாயகன் யுவன் கிருஷ்ணா அதிக ஈடுபாடுடன் இருக்கிறார் கிடா சண்டையில். அதேசமயம் நன்கு வசதி உள்ளவராக இருக்கும் ரிதன் கிருஷ்ணாவும் கிடா சண்டை மீது ஆர்வமாக இருப்பதில் மட்டுமல்லாமல் அதில் வெற்றி பெறுவது கௌரவம் என்று நினைக்கிறார்.
இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு கிடா சண்டையில் யுவன் கிருஷ்ணாவின் கிடா ரிதன் கிருஷ்ணாஸின் கிடாயை முட்டி கொம்பை உடைத்து வீழ்த்தி விடுகிறது.
இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் பகை ஏற்பட்டு பிரச்சனை செய்து கொண்டு சண்டையிட்டுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் வெட்டு குத்து என்று இறங்குகிறார்கள்.
ஒரு கட்டத்தில் ரிதன் கிருஷ்ணாஸ், யுவன் கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்று அவர்கள் வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சேதப்படுத்தி வருகிறார்.
இதனால் கோபமடைந்த ரிதன் கிருஷ்ணா, யுவன் கிருஷ்ணாஸை தேடிச்சென்று சண்டையிடுகிறார்.
அந்த இடத்தில் இருக்கும் யுவனின் மாமாவான மதுசூதனனும், ஊர் பெரியவர்களும் கிடா சண்டையில் ஆரம்பித்த பிரச்சனையை கிடா சண்டையை வைத்தே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க பார்க்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே ஜாக்கி படத்தோட மிதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : பிரேமா கிருஷ்ணதாஸ் & சி தேவதாஸ் & ஜெயா தேவதாஸ்
இயக்கம் : டாக்டர் பிரகாபல்
இசை : சக்தி பாலாஜி
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

