ஹாட்ஸ்பாட் 2 மச் விமர்சனம்

கே ஜே பாலு மணிமார்பன் மற்றும் அனில் கே ரெட்டி தயாரிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், பிரியா பவானி சங்கர், பிரிகிடா சாகா, அஸ்வின் குமார், ரக்ஷன், ஆதித்யா பாஸ்கர், விக்னேஷ் கார்த்திக், சஞ்சனா திவாரி மற்றும் பல நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஹாட்ஸ்பாட் 2 மச்.

ஹாட்ஸ்பாட் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ஹாட்ஸ்பாட்‌ 2 மச் வந்துள்ளது. 

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் தனது மாமனாரிடம் தன்னுடைய மனைவியின் தோழியாக இருக்கும் ப்ரியா பவானி சங்கரை அனுப்பி மூன்று கதைகளை சொல்லச் சொல்கிறார். சொல்லி முடித்த பிறகு அதில் ஒரு அதிர்ச்சியான விஷயத்திற்கு அவரிடம் சம்மதத்தையும் வாங்குகிறார் ப்ரியா பவானி சங்கர். 

முதலாவதாக சினிமா நடிகர்களின் ரசிகர்களாக இருப்பவர்களின் வாழ்க்கையைப் பற்றி, டாப் நடிகர்களாக இருக்கும் ராசா மற்றும் தாதா இவர்களின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள் ஆதித்யா பாஸ்கரும், வி ஜேரக்ஷனும். இருவரும் எதிர்  எதிர் வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் இருவருக்கிடையையும் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது அந்த சமயத்தில் இரு நடிகர்களின் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கிறது இதனால் இருவருக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. 

அந்த சமயத்தில் ஒரு மர்ம நபர் தாதா நடிகரின் ரசிகரான வி ஜே ரக்ஷனின் அம்மா அப்பாவை கடத்தி விடுகிறார். அதே சமயம் ராசாவின் ரசிகரான ஆதித்யா பாஸ்கரின் மனைவியும் கடத்தி விடுகிறார். 

அதற்குப் பிறகு இருவரிடமும் தொடர்பு கொண்டு கடத்தியவர்களை அனுப்ப வேண்டும் என்றால் உங்கள் இருவரின் நடிகரும் எனக்கு கான்பரென்ஸ் காலில் பேச வேண்டும் என்று 12 மணி வரை கெடு கொடுக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே முதல் கதையின் முடிவு.

இரண்டாவது கதையில் தனியார் கம்பெனியில் ஓய்வு பெற்றுவிட்டு வீட்டில் இருக்கிறார் தம்பி ராமையா அவருடைய மகளாக சஞ்சனா திவாரி இருக்கிறார். 

வெளிநாட்டில் படித்துவிட்டு வரும் தன்னுடைய மகளை அழைத்து வர ஆசையாக செல்லும் தம்பி ராமையாவிற்கு தன்னுடைய மகளின் கவர்ச்சியான உடை அவரை அதிர்ச்சியாக்குகிறது.. 

அதன் பிறகு தன்னுடைய ஆண் நண்பரை அப்பாவிடம் அறிமுகப்படுத்துகிறார் சஞ்சனா திவாரி. அப்பாவிடம் தன் காதலை சொல்லி சம்மதம் பெற நினைக்கிறார் சஞ்சனா.

ஆனால் அந்த சமயத்தில் அப்பாவின் முதலாளி வீட்டிற்கு வந்து அவருடைய மகளை பெண் கேட்கிறார். அந்த சமயத்தில் சஞ்சனா திவாரி அவர்களிடம் திமிராக நடந்து அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். 

இதனால் மனக்கஷ்டத்தில் இருக்கும் தம்பி ராமையா தன்னுடைய மகளின் பிறந்த நாள் என்று கிழிந்த பனியன் மற்றும் அரை ட்ரவுசர் அணிந்து வருகிறார். அதனைப் பார்த்த சஞ்சனா அதிர்ச்சியாகிறார். எதற்காக தம்பி ராமையா அப்படி வந்தார்? சஞ்சனாவிற்கு தக்க பதிலடி கொடுக்கவா? என்பதே இரண்டாவது கதையின் மீதிக்கதை.

மூன்றாவதாக இன்றைய காலகட்டத்தில் இருக்கும் ஜிம் பயிற்சியாளர் மற்றும் குடித்துக் கொண்டே இருக்கும் நண்பன் என இருவருடன் தங்கியிருக்கிறார் அஸ்வின் அவர் ஒரு ஓவியக் கலைஞராக இருக்கிறார்.

அஸ்வின் தன்னுடைய மொபைல் போனில் புதிய சிம் கார்டை மாற்றி அதை பயன்படுத்த டயல் செய்யும்போது 2050-ல் இருக்கும் பவானி ஸ்ரீ என்ற பெண்ணுடன் பேசும் வாய்ப்பும் ஏற்படுகிறது. 

அந்த பேச்சு நான் சண்டையில் உருவாகி, நாளடைவில் நட்பாக மாறி பிறகு  பவானி ஸ்ரீயை காதலிக்கிறார் அஸ்வின். 

அப்பொழுது இருவரும் எதிர்கால மற்றும் கடந்த காலத்தை பற்றி பேசிக் கொள்கின்றனர். கட்டத்தில் இருவருடைய தொலைபேசி தொடர்பு கட் ஆகி விடுகிறது.

அதன் பிறகு இரண்டு மூன்று வருடங்கள் கழித்து அஸ்வினை சந்திப்பதற்காக டைம் டிராவல் மூலம் வரும் பவானி ஸ்ரீ அதிர்ச்சி அடைகிறார். அதிர்ச்சி அடைய காரணம் என்ன? அப்படி அஸ்வினுக்கு என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : விக்னேஷ் கார்த்திக்

ஒளிப்பதிவு : ஜெகதீஷ் ரவி & ஜோசப் பால் இசை : சதீஷ் ரகுநாதன் 

படத்தொகுப்பு : யு முத்தையன்

கலை : சி சண்முகம் 

இணை தயாரிப்பாளர் : சி சுரேஷ் குமார் & இந்துக்குமார் 

நிர்வாகத் தயாரிப்பாளர் : பிரியன் 

மக்கள் தொடர்பு : வேலு