மாயபிம்பம் விமர்சனம் 3.5/5

கே ஜே சுரேந்தர் இயக்கத்தில், ஜானகி, ஆகாஷ், ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் மாய பிம்பம்.

2005-ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் ஒரு காதல் வாழ்க்கை, தவறான புரிதல் போன்றவற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

ஆகாஷ், ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் நான்கு பேரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கேபிள் டிவி நடத்தி வருகிறார், பெண்களை பார்த்து எடை போடுவதும் அவர்களை எளிதில் கவரும் குணம் கொண்டவருமாக இருக்கிறார்.

நாயகன் ஆகாஷ் மருத்துவ கல்லூரி மாணவராக இருக்கிறார். கல்லூரிக்கு செல்லும் போது பேருந்து பயணத்தில் தற்செயலாக நாயகி ஜானகியை பார்க்கிறார். ஜானகி மேல் ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது ஆகாஷ்க்கு.

ஜானகியை பார்க்க மீண்டும் செல்லும் ஆகாஷ் ஒரு விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்பொழுது அவரை கவனித்துக் கொள்பவராக அங்கு வருகிறார் ஜானகி. 

ஆகாஷின் நண்பர்கள் அங்கு இருக்கிறார்கள் அந்த பெண் தவறான பெண் என்று ஆகாஷிடம் நண்பர் சொல்கிறார். 

அதற்காக ஜானகியை சில முறைகளில் டெஸ்ட் செய்கிறார்கள். இறுதியாக தனியாக இருப்பதற்காக நாயகன் ஆகாஷ் ஜானகியை அழைத்து செல்கிறார்.

அதனை எதிர்பார்க்காத நாயகி ஜானகி கோபித்துக் கொண்டு அழுது கொண்டு சென்று விடுகிறார். சில நாட்களுக்குப் பிறகு ஜானகியை தேடி செல்லும் ஆகாஷ்க்கு பெரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்பதே மாயபிம்பம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

எழுத்து & இயக்கம் & தயாரிப்பு : K. J. சுரேந்தர் 

ஒளிப்பதிவு : எட்வின் சகே

இசை : நந்தா

படத்தொகுப்பு : வினோத் சிவகுமார்

கலை : மார்ட்டின்

பாடல் வரிகள் : விவேகா, பத்மாவதி

நடன இயக்குனர் : ஸ்ரீ கிரிஷ்

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

காதலர்கள் அழியலாம் காதல் அழிவதில்லை