தம்பி தலைவர் தலைமையில் விமர்சனம்

கண்ணன் ரவி தயாரிப்பில், நித்திஷ் சகாதேவ் இயக்கத்தில், ஜீவா, பிரார்த்தனா நாதன், தம்பி ராமையா, அனுராஜ், இளவரசு, ஜான்சன் திவாகர், சர்ஜின் குமார், ஜெய் வந்து, ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்திரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தம்பி தலைவர் தலைமையில்.

பஞ்சாயத்து தலைவராக இருக்கும் நாயகன் ஜீவா ஊர் மக்களின் வாக்கு தனக்கு வேண்டும் என்பதற்காக அவர்களின் வீட்டு நல்ல காரியங்கள் முதல் துக்க காரியங்கள் வரை அனைத்தையும் தலைமையேற்று செய்து வருகிறார். 

அப்படி ஒரு நாள் இளவரசுவின் மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் ஜீவா. 

அப்படி இருக்கும் போது இளவரசுவின் பக்கத்து வீட்டுக்காரராக இருக்கும் தம்பி ராமையாவின் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் அப்பா இறந்து விடுகிறார். 

இளவரசுவிற்கும் தம்பி ராமையாவிற்கும் இடையே ஏற்கனவே ஒரு பகை இருந்து வருகிறது. அந்தப் பகையால் இளவரசுவின் மகள் திருமணம் நடைபெறும் அதே நேரத்தில் தான் தன்னுடைய அப்பாவின் இறுதி ஊர்வலமும் நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லி விடுகிறார் தம்பி ராமையா. 

குறித்த நேரத்தில் தான் தன் மகள் திருமணம் தன் வீட்டிலேயே நடக்க வேண்டும் என்று இளவரசும் பிடிவாதமாக இருக்கிறார். 

திருமண நிகழ்ச்சியையும் இறுதி ஊர்வலத்தையும் ஜீவா எப்படி நடத்தி முடிக்கிறார் என்பதை கலகலப்பாகவும் சிரிக்கும் படியும் சொல்லி இருப்பதே தலைவர் தம்பி தலைமையில் படம். 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : கண்ணன் ரவி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கண்ணன் ரவி 

இயக்கம் : நிதிஷ் சாகாதேவ் 

இசை : விஷ்ணு விஜய் 

ஒளிப்பதிவு : பப்லு அஜு

மக்கள் தொடர்பு : சதீஷ் (S2 மீடியா)