ராஜா சாப் விமர்சனம்

மாருதி இயக்கத்தில், பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ராஜா சாப்.

நாயகன் பிரபாஸ் அப்பா அம்மா இல்லாமல் பாட்டியிடம் வளர்ந்து வருகிறார். பாட்டி பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தாத்தாவை நினைத்துக் கொண்டு தினமும் அழுது கொண்டிருக்கிறார்.

எந்த விஷயமும் ஞாபகம் இல்லாமல் போனாலும் தாத்தாவை பற்றிய ஞாபகம் மட்டும் பாட்டிக்கு இருக்கிறது.

தன்னுடைய தாத்தாவை தேடி செல்கிறார் பிரபாஸ். தாத்தாவை தேடிச்சென்ற பிரபாஸ்க்கு அவரைப் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் தெரிய வருகிறது.

பல மாய வித்தைகளை கற்று கொண்டு பாட்டியை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை திருடி சென்றவர்தான் தன்னுடைய தாத்தா சஞ்சய் தத் என்பதை அறிகிறார் பிரபாஸ்.

அதன் பிறகும் பிரபாஸுக்கும் சஞ்சய் தத்துக்கும் இடையே பிரச்சனை ஆரம்பமாகிறது. எதற்காக அந்த பிரச்சனை? அந்த பிரச்சனை எப்படி முடிந்தது? என்பதே ராஜா சாப் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : பீப்பிள் மீடியா ஃபேக்டரி

இயக்கம் : மாருதி

ஒளிப்பதிவு : கார்த்திக் பழனி 

இசை : தமன் 

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)