சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”.
இந்தப் படத்தில் சக்தி வாசு, பிரபல பாலிவுட் நடிகர் கபிர் துஹான் சிங் மலையாள நடிகர் அபிஷேக், இளங்கோ குமரவேல், இனியா, ஜெயசூர்யா, மேத்யூ வர்கீஸ், அசோக் பாண்டியன், ஜென்சன் திவாகர், வினோத் சாகர், பேபி ஷிமாலி, சிவா என பல பிரபல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
நாயகி தன் மகள் தமிழ் உடன், சென்னைக்கு வருகிறார். அவர் எதற்காக வருகிறார் என்பதை படத்தின் முடிவு வரை, சஸ்பென்சாக வைத்திருக்கிறார் இயக்குனர்.
கடத்தல் கேங்ஸ்டர் கள் ,ஆக இருக்கும் லால் சேட்டன் (சக்தி வாசு) ரங்கா ரெட்டி (அபிஷேக்) மற்றும் கான் (கபீர் துஹான் சிங்) இவர்கள் செம்மரக்கட்டையை கடத்துகிறார்கள். சட்டவிராத குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு துணையாக கமிஷனர் ஆக இனியா நடித்திருக்கிறார். லால் சேட்டனுக்கு பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது ஆட்டோ டிரைவர் (ஜென்சன் திவாகர்) பிரியாணிக்கு ஆசைப்பட்டு நாயகி(சிந்தியா) மற்றும் அவரது மகள் (ஷிமாலி)யும் மாட்டிக் கொள்ள அதன் பிறகு அவர்கள் இருவரும் ஆட்டோ டிரைவரும், இளங்கோ குமரவேல், நால்வரும் எப்படி தப்பித்தார்கள்? மூன்று கேங்ஸ்டர் நிலைமை என்ன ஆனது!!! இதற்கிடையில் இவர்களை திட்டமிட்டு பிடிக்க தீனதயாள், என்ற காவல் துறை அதிகாரி எடுக்கும் நடவடிக்கை என்ன? இதையெல்லாம் விறுவிறுப்பாக இரண்டு மணி நேரத்தில் மிக அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
நாயகி சிந்தியா லுர்டே ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் பறந்து பறந்து சண்டை போடுகிறார். உருக்கமான காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். சக்தி வாசு இப்படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.
அபிஷேக் வில்லனாக ஆர்ப்பாட்டம் செய்து நடித்திருக்கிறார். கபீர் வரும் காட்சிகள் செம மிரட்டலாக இருக்கிறது. கவர்ச்சியான கமிஷனர் ஆக இனியா கலக்கி இருக்கிறார்.
இளங்கோ குமரவேல் அப்துல்லா என்ற கதாபாத்திரத்தில் அம்சமாக பொருந்தி இருக்கிறார். மற்றும் மேத்யூ வர்கீர்ஸ், பேபி ஷிமாலி என அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் தினேஷ் தீனா, ஒரு கமர்சியல் படத்தை விறுவிறுப்பாக சஸ்பென்சாக இயக்கியிருக்கிறார். நாட்டுப்பற்று நிறைந்த இந்த படத்தை இரண்டு மணி நேரம் சிறப்பாக இயக்கி இருக்கிறார்.
சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாக பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.
ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு சூப்பர்.
தீபன் சக்கரவர்த்தியின் இசை மிரட்டல்.
ஜெகன் சக்கரவர்த்தியின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
ஆர்ட் டைரக்டராக தாமு பணி புரிந்திருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு அந்த கண்டோன்மென்ட் செட் சூப்பர்.
மற்றும் ஒப்பனையாளர், ஆடை வடிவமைப்பாளர், என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
நாயகி சிந்தியா லூர்டேவுக்கு ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் : சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ்
தயாரிப்பாளர் : சிந்தியா லூர்டே
டைரக்டர் : தினேஷ் தீனா
சண்டைப் பயிற்சி : ‘கலைமாமணி’ சூப்பர் சுப்பராயன்
ஒளிப்பதிவு : ராமலிங்கம்
இசை : (தீபன் சக்கரவர்த்தி)
கலை இயக்குனர் : தாமு MFA
எடிட்டர் : ஜெகன் சக்கரவர்த்தி
நடன இயக்குனர் : விக்னேஷ் பாடலாசிரியர்கள் : கபிலன், அ.பா.ராஜா, யாசின் ஷெரிஃப்
பாடகர்கள் : சைந்தவி, தீபன், யாசின் ஷெரிஃப், விக்ரம், சிபி
மக்கள் தொடர்பு : ஷேக்

