மார்க் விமர்சனம்

விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில், கிச்சா சுதீப், யோகி பாபு, விக்ராந்த், நவீன் சந்திரா, தீபிக்ஷா, ரோஹினி பிரசாத், குரு சோமசுந்தரம் மற்றும் பல நடிப்பில் வெளிவந்துள்ள படம் மார்க். 

ஒரு பெரிய ரவுடியாக இருக்கிறார் நவீன் சந்திரா அவருடைய தம்பியாக விக்ராந்திருக்கிறார். விக்ராந்திற்கு ஒரு அமைச்சரின் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார் நவீன் சந்திரா.

ஆனால் விக்ராந்தோ ஒரு பெண்ணை காதலித்து அந்த பெண்ணுடன் ஓடி விட்டது தெரிந்து நவீன் சந்திரா அதிக கோபம் கொள்கிறார். 

நான் காதலித்த பெண்ணுடன் செட்டில் ஆக பணத்திற்காக குழந்தைகளை கடத்தி யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் அடைத்து வைத்து விடுகிறார் விக்ராந்த். 

சத்தம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியாக இருக்கும் கிச்சா சுதீப் அந்த குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். கடத்தப்பட்ட ஒரு சிறுவனின் கையில் இருக்கும் அலைபேசியில், மறுநாள் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் ஒரு அரசியல்வாதியின் கொலை சம்பந்தப்பட்ட வீடியோ இருக்கிறது. 

அதற்காக கடத்தப்பட்ட சிறுவர்களை கொல்வதற்கு காவல் துறையை அனுப்புகிறார் அரசு அந்த அரசியல்வாதி. 

விக்ராந்தும் அவருடைய காதலியும் சேர்ந்தார்களா? இல்லையா? கடத்தப்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டதா? இல்லையா? கொலை செய்த அரசியல்வாதி முதலமைச்சராக பதவி ஏற்றாரா? இல்லையா? என்பதே மார்க் படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : விஜய் கார்த்திகேயா 

தயாரிப்பு : சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இசை : ஜெனிஸ் லோக்நாத் 

ஒளிப்பதிவு : சேகர் சந்திரா 

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்