டியர் ரதி விமர்சனம்

பிரவீன் கே மணி இயக்கத்தில், சரவண விக்ரம், ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ், யுவராஜ் சுப்ரமணியன், பசுபதி ராஜ், சரவணன் பழனிச்சாமி, தமிழ் செல்வன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவர உள்ள படம் டியர் ரதி.

சிறு வயதில் இருந்தே சரவணன் விக்ரமிற்கு பெண்களிடம் பேசுவதற்கு பயம் இருந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் அவருக்கு ஏற்பட்ட காதல் கூட தோல்வியில் முடிந்து விடுகிறது.

சரவண விக்ரமின் நண்பன் இந்த பயத்தை போக்குவதற்காக பாலியல் தொழில் செய்யும் இடத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு விலைமாதுவாக இருக்கும் நாயகி ஹஸ்லி அமானை பார்க்கிறார். 

மற்ற பெண்களிடம் இருக்கும் பயம் ஹஸ்லியிடம் இல்லாததால் அவருடன் ஒரு நாள் முழுவதும் வெளியில் சுற்றி செலவிட நினைக்கிறார். 

அதற்கு ஹஸ்லி அமனும், சரி என்று சொல்ல இருவரும் மறுநாள் தங்களுடைய பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். 

இந்த நிலையில், ஹஸ்லி அமானை, போலீஸ் ஒருவரும், ரவுடிகள் சிலரும் தேடுகிறார்கள். 

எதற்காக அவர்கள் ஹஸ்லி அமானை  தேடுகிறார்கள்? ஹஸ்லி அமான் அவர்களிடம் சிக்கினாரா? இல்லையா? சரவண விக்ரமுடன் சென்ற ஒரு நாள் பயணம் நன்றாக முடிந்ததா? இல்லையா? சரவண விக்ரமின் பெண்களிடம் பேசும் பயம் போனதா? இல்லையா? என்பதே டியர் ரதி படத்தோட மீதிக்கதை 

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் : பிரவீன் கே மணி

தயாரிப்பு : இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் LLP & Logline Pictures

தயாரிப்பாளர் : மோகனா மஞ்சுளா எஸ்.

விநியோகஸ்தர்: உத்ரா புரொடக்ஷன்ஸ்

இசை : எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்

ஒளிப்பதிவாளர் : லோகேஷ் இளங்கோவன் 

மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்