தி பெட் விமர்சனம்

எஸ் மணிபாரதி இயக்கத்தில், ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், திவ்யா, ஜான்விஜய், தேவி பிரியா ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் தி பெட்.

ஸ்ரீகாந்த் அவருடைய நண்பர்களான ப்ளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகிய நால்வரும் விடுமுறைக்காக ஊட்டிக்கு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது விலைமாதுவாக இருக்கும் சிருஷ்டி டாங்கேயை பணம் கொடுத்து உடன் அழைத்து செல்கிறார்கள்.

ஸ்ரீகாந்திற்க்கு சிருஷ்டி டாங்கே மீது காதல் ஏற்படுகிறது. அதனால் தன்னுடைய நண்பர்கள் யாரும் அவருடன் தவறாக நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறார். இருப்பினும் சிருஷ்டியுடன் தங்கள் நேரத்தை செலவிட வேண்டும் என்று நண்பர்கள் நினைக்கிறார்கள். 

இரண்டு நாட்கள் இப்படியே நகர்ந்துவிட மறுநாள் சிருஷ்டி டாங்கே திடீரென காணாமல் போய்விடுகிறார். அவரைத் தேடும் சமயத்தில் நண்பர்களில் ஒருவரும் காணாமல் போய்விடுகிறார்.

காணாமல் போன இருவரையும் தேடி அலைகிறார்கள் மற்ற மூவரும். இறுதியில் அவர்கள் இருவரும் கிடைத்தார்களா? இல்லையா? அவர்கள் காணாமல் போனதற்கான காரணம் என்ன? சிருஷ்டியின் மீது ஸ்ரீகாந்துக்கு காதல் ஏற்பட காரணம் என்ன? என்பதே தி பெட் மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்குனர் : எஸ்.மணிபாரதி

ஒளிப்பதிவு : கோகுல்

இசை : தாஜ்னூர்

தயாரிப்பு : ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ்

& ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர்கள் : கே.கந்தசாமி & கே.கணேசன் & வி.விஜயகுமார்‌ & வி.லோகேஸ்வரி விஜயகுமார்

மக்கள் தொடர்பு : ஏ. ஜான்