கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரெட்ட தல.
அருண் விஜய் சிறுவயதிலேயே பெற்றோர் இல்லாமல் வளர்ந்து வருகிறார். தன்னைப் போலவே சித் இத்னானியும் பெற்றோர் இல்லாமல் இருக்கிறார். இருவரும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள். இருவரும் காதலிக்கிறார்கள்.
ஐந்து வருடம் கழித்து இருவரும் மீண்டும் சந்திக்கும் பொழுது சித் இத்னானியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் சித் இத்னானியோ தான் வெளிநாடு செல்வதாகவும் அங்கு போய் செட்டிலாக போவதாகவும் சொல்கிறார்.
சித் இத்னானி பணத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
இரவில் ரோட்டில் நடந்து செல்லும் போது ஒரு விபத்து ஏற்பட, அந்த விபத்தின் மூலம் பணக்கார அருண் விஜய், அறிமுகம் ஆகிறார்.
அந்த பணக்கார அருண் விஜயின் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படும் சித் இத்னானி தன்னுடைய காதலராக இருக்கும் அருண் விஜய் மூலம் அவருடைய பணத்தை கைப்பற்ற ஒரு திட்டம் போடுகிறார். அந்தத் திட்டத்திற்கு அருண் விஜயும் சம்மதிக்கிறார்.
அதன் பிறகு இவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது? அவர்கள் நினைத்தபடி பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதே ரெட்ட தல படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : கிரிஷ் திருக்குமரன்
தயாரிப்பாளர் : பாபி பாலச்சந்திரன்
இசை : சாம் சிஎஸ்
எடிட்டர் : ஆண்டனி
கலை இயக்குனர் : அருண்சங்கர் துரை
ஸ்டண்ட் : பி.சி.ஸ்டண்ட்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

