2025 ஆம் ஆண்டின் ஒரு சிறந்த கண் கலங்க மனதை நெகிழ வைத்த படம் சிறை.
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு, எல் கே அக்ஷய்குமார், அனிஷ்மா அணில்குமார், ஆனந்த தம்பிராஜா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சிறை.
விக்ரம் பிரபு வேலூர் மாவட்டத்தில் ஆயுதப்படையில் ஏட்டாக வேலை செய்து வருகிறார். கைதிகளை சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை செய்து வரும் விக்ரம் பிரபு குற்றவாளியை பேருந்தில் அழைத்துக் கொண்டு செல்லும் நேரத்தில் குற்றவாளி தப்பிக்க முயற்சி செய்யும் பொழுது அவரை சுட்டு விடுகிறார் விக்ரம் பிரபு.
அதனால் விக்ரம் பிரபுவிற்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே, மேலும் ஒரு விசாரணை கைதியான அக்ஷய் குமாரை வேலூர் சிறையில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணி விக்ரம் பிரபுவிற்கு மீண்டும் கொடுக்கப்படுகிறது. விக்ரம் பிரபுவுடன் இரண்டு கான்ஸ்டபிள்களும் செல்கிறார்கள்.
அப்படி அழைத்துச் செல்லும் பொழுது, சாப்பிடுவதற்காக வழியில் பேருந்து நிற்கும் பொழுது அங்கு உடன் இருந்த போலீசாருக்கும், வேறு சிலருக்கும் பிரச்சனை ஏற்பட இந்த பிரச்சனையில் அவர்கள் வந்த பேருந்தை தவற விடுகிறார்கள்.
அந்தப் பேருந்தில் கைதியான அக்ஷய்குமார் இருக்கிறார். வேறொரு பேருந்தின் மூலம் அந்த பேருந்தை மடக்கி பிடித்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது அக்ஷய் குமார் அங்கு இல்லாமல் தப்பித்து சென்று விடுகிறார். அக்ஷய் குமார் மீண்டும் பிடிபட்டாரா? இல்லையா? இதனால் விக்ரம் பிரபுவின் நிலை என்ன ஆனது? அக்ஷய்குமார் யாரை எதற்காக கொலை செய்தார்? என்பதே சிறை படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : லலித் குமார்
இயக்கம்: சுரேஷ் ராஜகுமாரி
ஒளிப்பதிவு: மதேஷ் மணிக்கம்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
எடிட்டிங் : பிலோமின் ராஜ்
கதை: தமிழ்
திரைக்கதை: தமிழ், சுரேஷ் ராஜகுமாரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
ரேட்டிங் ⭐⭐⭐⭐

