ஹார்டிலே பேட்டரி விமர்சனம்

சதாசிவம் செந்தில்ராஜன் இயக்கத்தில், குரு லக்ஷ்மன், பாடினி குமார், சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகா லட்சுமி, இனியால், ஜீவா ரவி, ஷர்மிளா, பிரவீணா பிரின்சி, கலை, அஜித், பவித்ரா, சீனு ஆகியோர் நடிப்பில் Zee5 தளத்தில் வெளிவந்துள்ள இணைய தொடர் ஹார்டிலே பேட்டரி.

ஒருவர் மனதில் இருக்கும் காதலை கண்டறிய ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்று நினைத்து நாயகி பாடினி குமார் ஒரு கருவியை உருவாக்குகிறார். அந்தக் கருவி ஒருவர் மீது மற்றொருவருக்கு எவ்வளவு காதல் இருக்கிறது, என்பதை  காட்டுகிறது.

இதனை வைத்து தன் தோழியின் காதல் நிலையை கண்டறிந்து சொல்கிறார். 

ஒரு சூழ்நிலையில், நாயகி பாடினி குமாரை சந்திக்கும் நாயகன் குரு லக்‌ஷ்மன், அவரது கருவி பற்றி தெரிந்து அதனை கிண்டல் செய்வதோடு மட்டுமல்லாமல், அந்த கருவியால் ஒருவர் மனதில் இருக்கும் காதலை கண்டுபிடிக்க முடியாது, என்று சொல்லி நிரூபித்து காட்டுவதோடு, பாடினியை காதலிக்க வைப்பதாகவும், சவால் விடுகிறார். 

நாயகன் குரு லக்ஷ்மன் பாடினிக்கு கொடுத்த சவாலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ஹார்ட்டிலே பேட்டரி இணைய தொடரோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : சதாசிவம் செந்தில்ராஜன்

இசை: மைக்கேல் ஆகாஷ்

தயாரிப்பு: Elysium Maxima, Allo Media”

மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)