தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில், விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான்விஜய், கபீர் துஹான்சிங், மஹிமா குப்தா, விஜய் சேயோன், அல்ஃபரெட் ஜோஸ், சுபாங்கி ஜா, சிவ கிருஷ்ணா, இலக்கியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மகாசேனா.
யாழி என்கிற ஒரு காட்டுப் பகுதியில் மேலே இருப்பதுதான் குரங்கணி கிராமம். அந்தக் குரங்கணி கிராமத்தில் இருக்கும் மக்களுக்கும் மலை அடிவாரத்தில் இருக்கும் மக்களுக்கும் காலம் காலமாக பிரச்சனையை இருந்து கொண்டே இருக்கிறது.
அந்த குரங்கணி கிராமத்தில் இருக்கும் நாயகன் விமல் சேனா என்ற ஒரு யானையை வளர்த்து வருகிறார். விமலின் மனைவியாக சிருஷ்டி டாங்கே இருக்கிறார். அந்த கிராமத்தில் யாழி என்ற ஒரு சிலை இருக்கிறது.
அந்த சிலையை மலையின் அடிவாரத்தில் இருக்கும் பழங்குடியினர் மக்களை வைத்து திருட நினைக்கிறார் வனத்துறை அதிகாரியான ஜான்விஜய்.
இது ஒரு புறம் இருக்க கல்லூரி மாணவர்களான சிலர் அந்த வனப்பகுதிக்கு சுற்றுலா செலகின்றனர். அவர்களுக்கு சுற்றிக் காண்பிப்பதற்காக செல்கிறார் யோகி பாபு, அங்கு அவர்கள் பலவித இன்னல்களை சந்திக்கின்றனர்.
இந்த சமயத்தில் விமலின் யானை மதம் பிடித்து காட்டுக்குள் சென்று விடுகிறது. ஒரு கட்டத்தில் அந்த யானை விமலின் மகளை கொன்றுவிடுகிறது.
அந்த யானையை தேடி காட்டுக்குள் செல்கிறார் விமல்.
விமல் யானையை கண்டுபிடித்தாரா? கோவில் சிலையை கடத்த முயன்றவரின் முயற்சியை முறியடித்தாரா? குரங்கணி மக்களுக்கும் மலையடிவாரத்தில் இருக்கும் மக்களுக்கும் இடையான பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதே மகா சேனா படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து & இயக்கம் : தினேஷ் கலைச்செல்வன்
தயாரிப்பு : மருதம் ப்ரடக்ஷன்ஸ்
இசை : ஏ பிரவீன் குமார்
பின்னணி இசை : உதயகுமார்
ஒளிப்பதிவு : மானஸ் பாபு DR
மக்கள் தொடர்பு : ரேகா

