நிர்வாகம் பொறுப்பல்ல விமர்சனம்

எஸ் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில், கார்த்தீஸ்வரன், ஸ்ரீநிதி, லிவிங்ஸ்டன், ஆதவன், பிளாக் பாண்டி, அகல்யா வெங்கடேசன், மிருதுளா சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நிர்வாகம் பொறுப்பல்ல.

கார்த்தீஸ்வரன், ஆதவன், அகல்யா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து ஆன்லைனில் சில மோசடிகள் செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். 

 

சீட்டு கம்பெனி நடத்தி அதன் மூலம் பல்லாயிரக்கோடி சுருட்டிக்கொண்டு தலைமறைவாகின்றனர். 

 

இவர்களால் ஏமாற்றப்பட்டு லட்சங்களை இழந்த லிவிங்ஸ்டனும் அவருடைய மனைவியும் கஷ்டத்தில் இறந்து விடுகின்றனர்.

சில மாதங்கள் கழித்து 250 ரூபாய்க்கு மொபைல் போன் தருகிறோம் என்ற மோசடியில் மக்களை ஏமாற்றி 5000 கோடியை ஜாலியாக சுற்றித் திரிகிறார்கள். 

இப்படி சுற்றி திரியும் இவர்கள் மீது பொதுமக்கள் பலர் காவல் துறையில் புகார் கொடுக்க அதனை விசாரிக்க ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீநிதி.

ஒரு கட்டத்தில் தன்னுடைய தோழியையே ஏமாற்றி தெரிய வர ஸ்ரீநிதி அந்த மோசடி கும்பலை கைது செய்தாரா? இல்லையா? என்பதே நிர்வாகம் பொறுப்பல்ல படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : எஸ் கார்த்தீஸ்வரன் 

தயாரிப்பு : ராதாகிருஷ்ணன்

ஒளிப்பதிவு : என் எஸ் ராஜேஷ் 

இசை : ஸ்ரீகாந்த் தேவா

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்