சாரா விமர்சனம்

செல்லக்குட்டி இயக்கத்தில், விஜய் விஷ்வா, சாக்ஷி அகர்வால், யோகிபாபு, தங்கதுரை, ரோபோ சங்கர், மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாரா. 

நாயகன் விஜய் விஸ்வாவும் நாயகி சாக்ஷி அகர்வாலும் ஒரு நிறுவனத்தில் கட்டிட்டு பொறியாளர்களாக வேலை பார்க்கிறார்கள். சில வருடங்களாக காதலித்த இருவருக்கும் திருமணம் செய்து நிச்சயிக்கப்படுகிறது. 

அவர்கள் இருவரும் வேலை பார்க்கும் அந்த நிறுவனத்தில் கொத்தனாராக‌ செல்லக்குட்டியும், வாட்ச்மேனாக ரோபோ சங்கரும், வேறு வேலை செய்வராக பழைய ஜோக் தங்கதுரையும் யோகி பாபுவும் இருக்கிறார்கள். 

கொத்தனாராக வேலை செய்யும் செல்லக்குட்டியும் சாக்ஷியும் பள்ளி தோழர்களாக இருந்திருக்கிறார்கள். 

செல்லக்குட்டி சாக்ஷியை ஒருதலையாக காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் செல்லக்குட்டியால் விஜய் விஸ்வாவிற்கு பிரச்சனை ஏற்படுகிறது.

சாக்ஷி யின் காதலுக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த விஜய் விஷ்வா‌. பள்ளியில் படிக்கும்போதே சாக்ஷிக்காக வாழ்க்கையையே இழந்த செல்லக்குட்டி

இந்த இருவரில் சாக்ஷி யார் பக்கம் இருக்கிறார்? யாரை காப்பாற்றுகிறார்? என்பதே சாரா படத்தோட மீதிக்கதை. 

 தொழில்நுட்ப கலைஞர்கள் 

இசை : கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு : j.லட்சுமணன் குமார்

இயக்கம்ஸ: செல்ல குட்டி

தயாரிப்பு : ஸ்ரீ பட்டவன்

மக்கள் தொடர்பு : A. ராஜா