அங்கம்மாள் விமர்சனம்

விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநந்தன், யாஸ்மின், சுதாகர், வினோத் ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் அங்கம்மாள்.

அங்கம்மாளான கீதா கைலாசத்திற்கு  இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஒருவர் பரணி இரண்டாவது மகன் சரண் சக்தி. பரணிக்கு திருமணம் முடிந்து 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார், மனைவியாக தென்றல். 

தன்னுடைய இரண்டாவது மகன் சரண் சக்தியை கஷ்டப்பட்டு உழைத்து டாக்டர் ஆக்கிவிடுகிறார் அங்கம்மாள். அங்கம்மாள் ஊரில் இருக்கும் எல்லா வீடுகளுக்கும் பால் கொடுக்கும் வேலையை செய்து வருகிறார் இது மட்டும் இல்லாமல் ஊரில் எந்த ஒரு நல்லது கெட்டது நடந்தாலும் அதை முதல் ஆளாக அங்கு இருந்து எல்லா வேலைகளையும் செய்கிறார்.

அங்கம்மாள் மேல் சட்டை அதாவது ஜாக்கெட் அணியாமல் சுருட்டு பிடித்துக் கொண்டு கம்பீரமாக சுற்றி வருகிறார்.

இரண்டாவது மகன் சரண் வேலை பார்த்து வரும் இடத்தில் முல்லையரசியுடன் காதல் வயப்படுகிறார். முல்லையரசி பணக்கார வீட்டு பெண்ணாக இருக்கிறார், அவர் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

அங்கம்மா சரணின் திருமணத்திற்கு சம்மதித்தாலும், சரண் அங்கம்மாளிடம் முல்லையின் வீட்டினர் பணக்காரர்கள் அவர்கள் முன்னாடி நீ இப்படி ஜாக்கெட் இல்லாமல் சட்டை அணிந்து அடக்கமாக இரு என்று சொல்கிறார்.

நான் நானாக தான் இருப்பேன் அப்படி இருப்பதில் என்ன தவறு என்னால் அப்படி இருக்க முடியாது என்று ஆரம்பத்தில் அங்கம்மா சொன்னாலும் அதனை மகனுக்காக அதனை ஏற்றுக் கொள்கிறார்.

இதனால் அங்கமாளிடம் அனைவரும் ஜாலியாக பேசி சிலர் கேலி செய்கின்றனர்.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாத அங்கம்மாள் மீண்டும் பழைய மாதிரி மாறுகிறார். சரணின் திருமணம் நடைபெற்றதா? இல்லையா? என்பதே அங்கம்மாள் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் & என்ஜாய் பிலிம்ஸ் & ஃபயர் மூவி 

திரைக்கதை & இயக்கம் : விபின் ராதாகிருஷ்ணன்

இசை : முகமது மக்பூல் மன்சூர்

எடிட்டர்‌ : பிரதீப் ஷங்கர்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்