அஞ்சான் விமர்சனம்

என் லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா, சமந்தா, வித்யூத் ஜாம் வால், மனோஜ் பாப்பையா, திலீப் தாகில், ஜோ மல்லூரி ஆகியோர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு  நடிப்பில் வெளியான படம் அஞ்சான். இப்படம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது.

மும்பையில் பெரிய டானாக இருக்கும் சூர்யா தன்னுடைய நண்பர் வித்யுத் ஜம்வாலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார். அப்படி தன்னுடைய நண்பருக்காக ஒரு வேலை செய்யும் பொழுது சமந்தாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. 

சூர்யா & வித்யுத் ஜமாலின் வளர்ச்சி அங்குள்ள பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது அதனால் கோபமடையும் மும்பையின் மிகப்பெரிய தாதாவான மனோஜ் வாஜ்பை அவர்களை அழைத்து  அசிங்கப்படுத்தி கொலை செய்வதாக மிரட்டி அனுப்புகிறார். 

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மனோஜ் பாஜ்பாயை கடத்தி அசிங்கப்படுத்துகின்றனர் சூர்யாவும் வித்யுத் ஜம்வாலும்.

அவர்கள் இருவரையும் பழிவாங்க துடிக்கிறார் மனோஜ் பாஜ்பாய். வித்யுத் சூர்யாவை சமந்தாவுடன் ஒரு வாரம் நேரத்தை செலவின்படி அனுப்பி வைக்கிறார். 

அந்த சமயத்தில் வித்யுத்தை கொலை செய்து விடுகிறார் மனோஜ் பாஜ்பாய். அதனைத் தெரிந்து வரும் சூர்யாவையும் கொலை செய்கின்றனர் அவர் நண்பர்கள்.

பல வருடங்கள் கழித்து சூர்யாவின் தம்பி என்று சொல்லி மற்றொரு சூர்யா வருகிறார். 

உண்மையில் வந்தது சூர்யாவின் தம்பி தானா? எதற்காக வந்தார்? தன் அண்ணனின் இறப்பிற்கு சம்பந்தமானவர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதே அஞ்சான் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : லிங்குசாமி

தயாரிப்பு : சித்தார்த் ராய் கபூர், சுபாஷ் சந்திர போஸ்

இசை : யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன்

பிஆர்ஓ: ஜான்சன்