ஜேகே சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஸ், ரெடிங் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், சென்றாயன், அகஸ்டின், பிளேடு சங்கர், ராமச்சந்திரன், அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரிவால்வர் ரீட்டா.
சூப்பர் சுப்பராயன் பாண்டிச்சேரியின் பெரிய ரவுடியாக இருக்கிறார். அவர் வேறு ஒரு வீட்டிற்கு செல்வதற்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் வீட்டுக்கு சென்று விட, அவரை அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்யும் போது தவறுதலாக கீழே விழுந்து இறந்து விடுகிறார்.
சூப்பர் சுப்புராயனின் மகனான சுனில் தன்னுடைய அப்பாவை கண்டுபிடிக்க அடியாட்களுடன் தேடிக் கொண்டிருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க மறுபுறத்தில் சூப்பர் சுப்பராயனின் தலையை கைப்பற்றி அதன் மூலம் 5 கோடி ரூபாய் பெறுவதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் தன்னுடைய வீட்டில் இறந்த சூப்பர் சுப்பராயன் உடலை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொள்கிறார்.
அப்படி முயற்சிகள் செய்யும்பொழுது ஏற்கனவே கீர்த்தி சுரேஷால் அவமானப்பட்ட இன்ஸ்பெக்டரான ஜான் விஜய் கீர்த்தி சுரேஷை பழிவாங்க நினைக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் சூப்பர் சுப்புராயன் உடலை அப்புறப்படுத்தி பிரச்சனையில் இருந்து மீண்டாரா? இல்லையா? ஜான்விஜய் கீர்த்தி சுரேஷை பலி வாங்கினாரா? இல்லையா? சூப்பர் சுப்பிராயன் தலையை கொடுத்து ஐந்து கோடி ரூபாயை அந்த கும்பல் பெற்றதா? இல்லையா? என்பதே ரிவால்வர் ரீட்டா படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து & இயக்கம் : ஜே.கே. சந்துரு
தயாரிப்பு : சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி
இசை : சீன் ரோல்டன்
எடிட்டிங் : பிரவீன். கே.எல்
கலை இயக்கம் : எம்.கே.டி
சண்டை : திலிப் சுப்பராயன்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

