தேரே இஷ்க் மேய்ன் விமர்சனம்

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், தனுஷ், கீர்த்தி சனோன், புஷ்பராக் ராய் சவுத்ரி, பிரகாஷ்ராஜ், விரேன் பார்மன், பரம்வீர் சிங் சீமா, மகம்மது ஷீஷ்ஷான்,  சித்தரஞ்சன் திரிபாதி மற்றும் பல நடிப்பில் வெளிவந்துள்ள படம் தேரே இஷ்க் மேய்ன்.

தனுஷ் சண்டைகள் செய்து கல்லூரியில் ரவுடியாக சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாயகி க்ரீத்தி தனுஷை நல்லவனாக மாற்றி காட்டுகிறேன் என்று பிரபஷரிடம் கூறி அதற்கு வேலை செய்கிறார். 

க்ரித்தி தனுஷிடம் நான் உன்னை நல்லவனாக மாற்றுகிறேன் என்று சொல்கிறார். அதற்கு தனுஷ் நீ என்னுடைய கேர்ள் பிரண்டாக இருந்தால் மட்டும் தான் நான் அப்படி மாறுவேன், என்று கூற கிருத்தியோ நான் உன்னை காதலிக்க மாட்டேன் உன் பிரண்டாக மட்டும் தான் இருப்பேன் என்று கூறுகிறார். 

நாட்கள் ஓட ஓட தனுஷுக்கு கீர்த்தி மீது அதிக காதல் ஏற்படுகிறது. ஆனால் க்ருத்தியோ தனுஷை காதலிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் தனுஷ் க்ருத்தியிடம் தன் காதலை சொல்கிறார். அதனை ஏற்றுக் கொண்ட க்ரித்தி தன் அப்பாவை வந்து பார்க்க செல்கிறார். அப்பொழுது கிருத்தியின் அப்பா தனுஷிடம் ஒரு நிபந்தனையை வைக்கிறார். 

அந்த நிபந்தனை என்ன? நிபந்தனையை தனுஷ் நிறைவேற்றி க்ருத்தியை திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதே தேரே இஷ்க் மேய்ன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : பூஷன் குமார், கிருஷ்ணன்குமார், ஆனந்த் எல் ராய், ஹிமான் ஷூ வர்மா

இசை : ஏ ஆர் ரகுமான் 

ஒளிப்பதிவு : துஷார் காந்தி ராய் 

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது &  பாரஸ் ரியாஸ்