அபின் ஹரிஹரன் இயக்கத்தில், ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், ஜெகன், ஆர் சௌந்தர்ராஜன், முண்டாசுப்பட்டி ராமதாஸ், மாலா பார்வதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அதர்ஸ்.
நடு இரவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒரு கல்லை வைத்து அங்கு செல்லும் வாகனங்களில் விபத்து ஏற்பட்டு திருடன் முயற்சிக்கிறார் ஒருவர்.
அப்படி செய்கையில் அந்தக் கல்லில் பட்டு ஒரு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. வேன் வெடித்து அந்த வேனில் இருந்தவர்கள் அனைவரும் இறந்து விடுகிறார்கள்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக போலீஸ் உயரதிகாரியாக ஆதித்யா மாதவனும், அவருடன் இன்ஸ்பெக்டராக அஞ்சு குரியனும், முனிஸ் காந்தும் வருகிறார்கள்.
இந்த வழக்கை விசாரிக்கும் பொழுது அந்த வேன் எதேர்ச்சையாக விபத்துக்குள்ளாகவில்லை திட்டமிட்டு வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றும், அந்த வேனில் டிரைவரை தவிர மற்றவர்கள் இறந்து விட்டனர் என்றும் அந்த டிரைவர் எங்கே போனார் என்று ஆரம்பித்து அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம் கௌரி கிஷன் மருத்துவராக பணி புரியும் கருத்தரித்தல் மருத்துவமனையில் ஒரு பெரிய பிரச்சனை உருவாகிறது. அதனை கௌரி கிஷன் கண்டுபிடிக்கிறார்.
இந்த மருத்துவமனை பிரச்சனைக்கும், வேன் விபத்துக்குள்ளானதுக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்பதே அதர்ஸ் படத்தோட மீதிக்கதை.
சமூகத்தில் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்ய முடியும் என்று ஒரு ரசிகனை யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : அபின் ஹரிஹரன்
தயாரிப்பு : கிராண்ட் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு : அரவிந்த் சிங்
இசை : ஜிப்ரான்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

