பைசன் விமர்சனம்

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் சார்பில், சமீர் நாயர், தீபக் சேகல், பி.ஏ. ரஞ்சித், அதிதி ஆனந்த் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம்பெருமாள், அருவி மதன், அனுராக் ஆராரோ, ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பைசன்.

திருச்செந்தூரில் இருக்கும் மனத்தி கிராமத்தில் வசிப்பவர் தான் வேலுச்சாமி (பசுபதி).  பசுபதியின் மகனாக துருவ்விக்ரமும் மகளாக ரஜிஷா விஜயனும் இருக்கிறார்கள். 

துருவ் விக்ரமுக்கு கபடியில் விருப்பம் ஏற்பட இந்திய அணியில் சேர்ந்து கபடி ஆட்டக்காரராக வேண்டும் என்று பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறார். 

கிராமத்தை சுற்றி இருக்கும் பகுதிகளில் பல பல தலைமுறைகளாக இருக்கும் ஜாதிப்பகையால் கலவரம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.

இதற்கு பாண்டியராஜா என்கிற அமீரும், கந்தசாமி என்கிற லால் இவர்களின் தலைமையில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து சண்டைகளும் பிரச்சனைகளும் கொலைகளும் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. 

இதனால் கிராமமே இரண்டாகப் பிளவு பட்டு இரண்டு ஜாதி தலைவர்கள் சொல்படிதான் கேட்டு நடந்து கொள்கிறது. 

தன்னுடைய சிறிய வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் தன்னுடைய மகன் துருவிற்கு கபடி எல்லாம் வேண்டாம் என்று அருவி மதனிடம் சொல்கிறார் பசுபதி.

இருந்தாலும் துருவின் திறமையை எடுத்து சொல்லி கபடி விளையாட சம்மதம் வாங்குகிறார் அருவி மதன். 

அருவி மதன் துருவை பல இடங்களில் போட்டிகளில் விளையாட வைக்க துருவின் புகழ் எல்லா இடங்களிலும் தெரிய வருகிறது.

தமிழ்நாட்டு அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் இரு ஜாதிக்கிடையே சண்டை ஏற்பட்டுக் கொண்டிருக்க இந்த ஊரில் இருந்தால் மகனின் எதிர்காலம் அழிந்துவிடும் என்று நினைத்து பசுபதி கபடி பயிற்சிக்காக துருவ்விக்ரமை வெளியூருக்கு அனுப்பி விடுகிறார். 

அங்கு நன்கு பயிற்சிகள் பெற்று இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவருடைய பெயர் இடம்பெறாமல் போய்விடுகிறது. 

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு துருவ்விக்ரம் மீண்டும் தன்னுடைய கிராமத்திற்கு வந்து விடுகிறார். 

கிராமத்தில் அமீர் கொல்லப்பட பெரிய கலவரமே ஏற்படுகிறது. இந்த சமயத்தில் துருவிற்கு இந்தியா சார்பாக விளையாட இடம் கிடைத்துவிட்டது என்று தொலைபேசி அழைப்பு வர துருவை பசுபதி வெளியூருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்கிறார். 

யார் கண்ணிலும் படாமல் துருவ் விக்கிரமை பசுபதி ஊருக்கு அனுப்பி வைத்தாரா? இல்லையா? அமீரின் கொலைக்கு காரணம் யார்? அந்த கிராமத்தில் ஜாதி கலவரம் ஒழிந்ததா? இல்லையா? துருவ் விக்ரம் இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே பைசன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

 

இசை : நிவாஸ் கே பிரசன்னா பாடலாசிரியர்கள் : மாரி​ செல்வராஜ், அறிவு ஒளிப்பதிவு : எழில் அரசு கே

கலை இயக்குனர் : குமார் கங்கப்பன் படத்தொகுப்பாளர் : சக்தி திரு

சண்டை : திலிப் சுப்பராயன்

நடனம் : சாண்டி

ஒலிப்பதிவு : சுரேன்.ஜி

ஒலி வடிவமைப்பாளர் : சுரேன்.ஜி, அழகியகூத்தன்

ஆடை வடிவமைப்பாளர் : ஏகன் ஏகாம்பரம் ஒப்பனை : கலையழகன்

ஸ்டில்ஸ் : ஆர்.எஸ்.ராஜா

மக்கள் தொடர்பு : குணா, சதீஷ் (AIM), யுவராஜ்