சிவராமன் இயக்கத்தில், விதார்த், சோனியா அகர்வால், அலக்கியா, பிர்லாபோஸ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வில்.
சோனியா அகர்வால் நீதிபதியாக வருகிறார். பல வழக்குகளை விசாரித்தும் வருகிறார். அவர் விசாரிக்கும் வழக்குகளில் ஒன்று சொத்து வழக்கு.
வயதான ஒரு நபர் தன்னுடைய சொத்துக்களை இரண்டு மகன்களுக்கும் பிரித்து வைத்துவிட்டு, சென்னையில் இருக்கும் 2 கோடி மதிப்புள்ள பங்களாவை பெண் ஒருவர் பெயரில் எழுதி வைத்து வருகிறார்.
அவர் இறந்துவிட, அவருடைய மகன்கள் 2 கோடி மதிப்புள்ள பங்களாவை எழுதி வைத்த பெண் இவர்தான் என்று கோர்ட்டில் நீதிபதி சோனியா அகர்வால் முன் ஒரு பெண்ணை நிறுத்துகிறார்கள்.
ஆனால் அந்தப் பெண் மீது சோனியா அகர்வாலுக்கு சந்தேகம் ஏற்பட, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சப் இன்ஸ்பெக்டரான விதார்த்தத்தை நியமிக்கிறார்.
விதார்தின் விசாரணையில், சொத்திற்காக அழைத்து வரப்பட்ட பெண் போலி என்று கண்டுபிடிக்கிறார்.
அந்த உண்மையான உயிலுக்கு உரிமையான பெண் அலக்காவை தேடி கண்டுபிடித்து நீதிபதியான சோனியா அகர்வால் முன் நிறுத்துகிறார் விக்ராந்த்.
அந்த வயதானவர்க்கும், அவர் எழுதி வைத்த உயிலுக்கும், அலக்கியாவுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அலக்கியா மீது உயிரை எழுதி வைத்தார்? என்பதே வில் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குநர் : S சிவராமன்
இசையமைப்பாளர் : சௌரப் அகர்வால்
தயாரிப்பு : Foot Steps Production
இணை தயாரிப்பு : Kothari Madras International Limited
ஒளிப்பதிவு : TS பிரசன்னா
எடிட்டர் : G தினேஷ்
பாடியவர் : கலை குமார்
கலை இயக்குனர் : மணி
நடன இயக்குனர் : அபு & சால்ஸ்
சண்டைக்காட்சிகள் : தீ கார்த்திக்
வசனம் : எஸ் சிவராமன்
ஒலி வடிவமைப்பாளர்: RK அஸ்வத் (DAW RECORDS)
மக்கள் தொடர்பு : வேலு

