இறுதி முயற்சி விமர்சனம்

வெங்கட் ஜனா இயக்கத்தில், ரஞ்சித், மேகாலி மீனாட்சி, விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ், மௌனிகா, நீலேஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் இறுதி முயற்சி. 

கணவன் மனைவியான ரஞ்சித்தும் மேகாலி மீனாட்சியும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள்.

ரஞ்சித் கடன் வாங்கிய இடத்தில் வாங்கிய கடனை விட வட்டியை அதிகமாக கட்டியும் கடனை கட்ட சொல்லி பணம் கேட்டு கந்து வட்டி மாபியா மிரட்டுகிறது. 

மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தை கண்காணிக்க இரண்டு அடியாட்களை அவர்கள் வீட்டு வாசலிலே நிறுத்தி வைக்கிறார்கள்.

கடனை வசூலிக்க அந்த குடும்பத்தை பல வழிகளில் அவர்கள் துன்புறுத்துகிறார்கள். 

கடனை கட்டுவதற்காக பல வழிகளில் முயற்சி செய்தும் ரஞ்சிதாள் கடனை கட்ட முடியாமல் போகிறது. 

இது ஒரு புறம் இருக்க, சென்னையில் சைக்கோ கொலைகாரன் ஒருவன் ஒவ்வொருவராக கொலை செய்கிறான். அவன் ஒரு நாள் போலீஸிடம் தப்பிப்பதற்காக ரஞ்சித்தின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் சென்று அங்கு இருந்து வருகிறான். 

கந்துவட்டி மாஃபியாவின் தொல்லை‌ ரஞ்சித் குடும்பத்திற்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போக ஒரு விபரீதமான முயற்சி எடுக்கிறார் ரஞ்சித். அந்த முயற்சி என்ன? அந்த முயற்சியால் கடன் பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? ரஞ்சித் வீட்டுக்குள் நுழைந்த அந்த கொலையாளி யார்? என்பதே இறுதி முயற்சி படத்தோட மீதிக்கதை. 

தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் – வெங்கட் ஜனா

தயாரிப்பு நிறுவனம் – வரம் சினிமாஸ்

தயாரிப்பு – வெங்கடேசன் பழனிச்சாமி

படத்தொகுப்பு – வடிவேல் விமல்ராஜ்

ஒளிப்பதிவு – சூர்யகாந்தி

இசை – சுனில் லாசர்

தயாரிப்பு நிர்வாகி – கே பி வேலு

கலை இயக்குனர் – பாபு எம் பிரபாகரன்

பாடல்கள் – மஷூக் ரஹ்மான்

ஒலி கலவை – ஆனந்த் ராம்சந்திரன்

பின்னணி – பாலு ஸ்டூடியோ

DI –  இன்பினிட்டி மீடியா

வி எப் எக்ஸ் – ஸ்ரீரஞ்சனி பி

எஸ் எப் எக்ஸ் – மதன்

வண்ணங்கள் – சேது செல்வம்

புகைப்படம் – மணிவண்ணன்

விளம்பர வடிவமைப்பு – ரெட் டாட் பவன்

இணை இயக்கம் – குருமூர்த்தி

விநியோகஸ்தர் – அஜய் பிலிம் பேக்டரி

PRO – வேலு