மரியா விமர்சனம்

ஹரி கே சுதன் இயக்கத்தில், சாய் ஸ்ரீ பிரபாகரன், பாவல் நவகீதன், சிது குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரியா.

சாய் ஸ்ரீ கன்னியாஸ்திரியாக இருக்கிறார் 5 வருடங்களுக்கு பிறகு விடுமுறையில் தன்னுடைய கஸினான தங்கை சிதுக்குமரேசன் வீட்டிற்கு வருகிறார். 

அங்கே சிது குமரேசன் உடன் விக்னேஷ் ரவி என்பவரும் லிவிங் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடன் மேலும் இருவரும் லிவிங்ல் இருந்து வருகிறார்கள். 

அவர்கள் வீட்டிலேயே சாய் ஸ்ரீக்கு ஒரு தனி அறையை கொடுத்து தங்க வைக்கிறார் சிது குமரேசன்.  அங்கே சாய் ஸ்ரீ பிரேயர் பண்ணுவது, பைபிள் படிப்பது என்று இருந்து வருகிறார். 

இரண்டாவது நாளிலேயே சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அங்கு நடக்கும் சில விஷயங்கள் சாய் ஸ்ரீக்கு ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கன்னியாஸ்திரி உடையை மாற்றி சுடிதார் அணிகிறார். 

மற்ற பெண்களைப் போல தானும் வாழ வேண்டும் என்று நினைத்து கன்னியாஸ்திரி நிலையிலிருந்து வெளியே வர நினைக்கிறார். 

ஊருக்கு சென்று அதனை தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார். ஆனால் அவருடைய அம்மாவோ அதை ஏற்றுக் கொள்ளாமல் அவரை அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். 

அதன் பிறகு அங்கிருந்து கிளம்பி மீண்டும் சிதுகுமரேசன் வீட்டுக்கே வந்து விடுகிறார்.

சாய் ஸ்ரீ கன்னியாஸ்திரி வாழ்க்கையை தொடர்ந்தாரா? இல்லையா? இல்லை மற்ற பெண்களைப் போல வாழ ஆரம்பித்தாரா? இல்லையா? என்பத மரியா படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : ஹரி கே ஹரசுதன் 

இயக்கம் : ஹரி கே சுதன் 

ஒளிப்பதிவு : மணிசங்கர் 

இசை : அரவிந்த் கோபால கிருஷ்ணன் &பரத் சுதர்சன் 

படத்தொகுப்பு : காமேஷ் & நிஷார் ஷெரீப்

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)