மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், எஸ் சாம் இயக்கத்தில், தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், ப்ரவீன், யுவராஜ் கணேசன், சுவாதி, திவாகர், கலைக்குமார், நித்தி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் யோலோ.
நாயகன் தேவ் எவ்ளோ என்கிற youtube சேனல் வைத்து ப்ராங்க் வீடியோவை எடுத்து தொழில் செய்து வருகிறார்.
நாயகி தேவிகா தனியார் நிறுவனத்தின் வேலை பார்க்கிறார். தேவிகாவின் அப்பாவான படாவா கோபி மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டிலிருந்து விஜே நிக்கியின் குடும்பம் தேவிகா வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது தேவிகாவை பார்த்த நிக்கியின் அக்கா இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது பிறகு எதற்கு மாப்பிள்ளை பார்க்கிறீர்கள் என்று கேட்கிறார்.
இதனைக் கேட்ட தேவிகாவின் குடும்பம் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சி ஆகிறார்கள். தேவிகா நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அப்பாவிடம் கூறுகிறார்.
இல்லை இவருக்கு திருமணம் நடந்து விட்டது என்றும் கணவன் தேவ்வுடன் ஹனிமூன் வந்திருந்த போதுதான் இவர்களை நாங்கள் சந்தித்தோம் என்றும் கூறுகிறார் நிக்கின் அக்கா.
தனக்குத் திருமணம் நடந்ததாக எந்த ஞாபகமும் இல்லை என்று சொல்கிறார் தேவிகா.
தேவ் யார் என்று தேடுகிறார் அவரை கண்டுபிடிக்கவும் செய்கிறார். தேவுக்கும் திருமணம் செய்து கொண்டதாக எந்த நினைவும் இல்லை என்று கூறுகிறார்.
ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொண்டதற்கான சாட்சிகள் இருக்கிறது. இவர்களுடைய திருமணம் பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.
இவர்களுக்கே தெரியாமல் இவர்களுக்கு எப்படி திருமணம் நடந்தது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை இவ்வளவு படத்தோட மீதி கதை
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : மகேஷ் செல்வராஜ் எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ்
கதை : ராம்ஸ் முருகன்
இயக்கம் : எஸ் சாம்
திரைக்கதை : சாம், ராம்ஸ் முருகன், பண்புச்செல்வன், மகேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு : சூரஜ் நல்லுசாமி
இசை : சக்கினா சேவியர்
படத்தொகுப்பு : ஏ எல் ரமேஷ்
மக்கள் தொடர்பு : ஏய்ம் சதீஷ்

