பாம் விமர்சனம்

சுதா சுகுமார் தயாரிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ்,  ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, பால சரவணன், சிங்கம் புலி, டி எஸ் கே, கீச்சா ரவி, பூவையார், எப்புட்றா ரோஹன், காவியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பாம்.

சாதி வேற்றுமை என்று எதுவுமே இல்லாமல் ஒற்றுமையாக காளகம்மாய்பட்டி கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மலையின் உச்சியில் ஜோதி தெரிவதும்,  மயில் தெரிவதும், இறைவனின் ஆசி கிடைத்தது என்று நினைத்து ஊர் மக்கள் அனைவரும் திருவிழாவை கொண்டாடுகிறார்கள் இது பல வருடங்களாக நடந்து வருகிறது. 

ஒரு சமயத்தில் ஊரில் ஒரு பெரும் வெள்ளம் ஏற்படுகிறது. அப்போது பக்கத்தில் இருக்கும் மலையில் இருந்து ஒரு பெரிய கல் கீழே விழுகிறது அந்த கல் இரண்டாகப் பிரிகிறது. இந்த சூழ்நிலையில் அந்த வருடம் ஜோதியும் மயிலும் காட்சியளிக்கப்படவில்லை இதனால் பிரச்சனை ஏற்படுகிறது.

இரண்டு கல்லாக பிரிந்ததை ஒரு கல்லை வைத்து பாதி பேர் காளபட்டியாகவும் இன்னொரு கல்லை வைத்து பாதி பேர் கம்மாய்பட்டியாகவும் அந்த ஊரை பிரிக்கிறார்கள். 

இப்படி இரண்டு பிரிவாக பிரிந்த கிராமத்தில் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களுக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது இது பல வருடங்களாக தொடர்ந்து கொண்டே வருகிறது. 

அரசு அதிகாரிகள் பல பேர் தலையிட்டும் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியாமல் போய்விடுகிறது. அதனால் கிராமத்திற்கு எந்த விதமான அரசு கொடுக்கும் திட்டங்கள் எதுவும் கிடைக்காமலும் போகிறது. 

இந்த கிராமத்தில் இருக்கும் காளி வெங்கட் இரண்டு மக்களையும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் செய்து வருகிறார் ஆனால் எந்த முயற்சியும் எடுபடவில்லை.

காளி வெங்கட்டின்  தங்கையாக ஷிவாத்மிகாவும், நண்பராக அர்ஜுன் தாசும் இருக்கிறார்கள். அர்ஜுன் தாஸ் காளி வெங்கட்டிடம் இந்த ஊரில் இருக்க வேண்டாம் வேறு ஊருக்கு சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

ஆனால் காளி வெங்கட் இந்த ஊரில் தான் இருப்பேன் என்ன நடந்தாலும் இந்த ஊரை விட்டு வரமாட்டேன் என்று இருக்கிறார். 

இந்த சூழ்நிலையில் காளி வெங்கட் இறந்து விடுகிறார். அவர் இறந்துவிட்டாலும் அவர் உடலில் இருந்து வாயுவானது அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கிறது. அதனால் தன் நண்பன் இறக்கவில்லை என்று நினைக்கிறார் அர்ஜுன் தாஸ். 

காளி வெங்கட்டை ஊருக்கு நடுவில் வைக்கிறார்கள்.  அவர் உடலில் இருந்து வாயு வெளியாவதால் உடல் ஆடுகிறது இதனால் அந்த ஊர் பூசாரி நம் ஊருக்கு சாமி வந்திருக்கிறது என்று சொல்லி காளி வெங்கட்டை சாமியாக கும்பிடுகிறார்கள்.

உண்மையில் காளி வெங்கட் இறந்து விட்டாரா? இல்லையா? அந்த ஊர் மக்கள் காளி வெங்கட்டை சாமியாக நினைத்து என்னவெல்லாம் செய்தார்கள்? ஊர் இரண்டும் ஒன்று சேர்ந்துதா? இல்லையா? என்பதே பாம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : சுதா சுகுமார் 

கதை திரைக்கதை : மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் இயக்கம் : விஷால் வெங்கட்

வசனம் : மகிழ்நன் பி எம் 

ஒளிப்பதிவு : ராஜ்குமார் 

இசை : டி இமான் 

மக்கள் தொடர்பு : ஏய்ம் சதிஷ்