தணல் விமர்சனம்

ஜான் பீட்டர் தயாரிப்பில், ரவீந்திர மாதவா இயக்கத்தில், அதர்வா, அஸ்வின் கக்கமனு, லாவண்யா, ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லட்சுமி பிரியா, பாரத், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தணல்.

காவல்துறையில் கான்ஸ்டேபிலாக பணிக்கு சேர்வதற்காக நாயகன் அதர்வா அதற்காக பணியில் சேர்வதற்கான அப்பாயின்மென்ட் ஆர்டரை வாங்குவதற்காக காவல் நிலையத்திற்கு தன் நண்பர்களுடன் செல்கின்றார் அதர்வா. 

ஆனால் காவல் நிலையத்தில் அவர்களை காலையில் இருந்து மாலை வரை காத்திருக்க வைக்கின்றனர். இறுதியில் ஒரு போலீஸ் அதிகாரி வந்து ஆறு பேரையும் இரவு ரவுண்ட்ஸ்க்கு போகுமாறு சொல்கிறார். 

அந்த ஆறு பேரும் முதல் நாளே ஆர்டரை வாங்காமல் ரோந்துக்கு செல்ல வேண்டுமா என்று சலித்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். 

அப்படி சென்று கொண்டிருக்கும்போது பாதாள சாக்கடை மூடி திறந்து ஒருவன் வெளியில் வருகிறான் இவர்களை பார்த்ததும் ஓடி விடுகிறான். 

அவனை சந்தேகப்பட்டு அதர்வாவும் மற்றும் அவருடைய நண்பர்களும் துரத்திக் கொண்டு செல்கின்றனர். அப்படி செல்லும்போது ஒரு குடிசை வாழ் பகுதியில் நுழைந்து விடுகின்றனர். அந்தப் பகுதியில் ஆள் நட மட்டுமே இல்லாமல் இருக்கிறது. அந்த இடத்தின் நுழைவு எது வெளியில் செல்வதற்கான வழி எது? என்று கூட தெரியவில்லை.

தேடிவந்த நபர் அந்த இடத்தில் மாயமாகி விடுகிறார். தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில் அஸ்வின் மற்றும் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள் அவரிடம் சென்ற பரணி இந்த பக்கம் ஒரு நபர் சென்றான் பார்த்தீர்களா என்று விசாரிக்கும் போதே கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தரணியின் தலையை வெட்டி விடுகிறார். 

இதனைப் பார்த்த அதர்வா அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு அங்கு பல நபர்களை பார்க்கிறார்கள். 

அவர்கள் ஏதோ ஒரு சதி திட்டத்திற்கான வேலையை செய்து இருக்கிறார்கள் என்று அதர்வாவுக்கு தெரிய வருகிறது. 

அவர்களின் சதி திட்டம் என்ன? எதற்கு இப்படி கொலை வெறியுடன் திரிகிறார்கள்? என்பதே தணல் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : ஜான் பீட்டர் 

இயக்கம் : ரவீந்திர மாதவா 

இசை : ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு : சக்தி சரவணன்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்