உருட்டு உருட்டு விமர்சனம்

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் சார்பில், பத்ம ராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், கஜேஷ் நாகேஷ்,  ரித்விகா ஸ்ரேயா, மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா,  ஹேமா, சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா,

தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் உருட்டு உருட்டு.

நாயகன் கஜேஷ் நாகேஷ் எந்த நேரமும் குடித்து விட்டு, எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் கஜேஷ் நாகேஷை நாயகி ரித்விகா ஸ்ரேயா, உயிருக்கு உயிராக காதலிக்கிறார்.

ஆனால் கஜேஷோ போதை குறைய குறைய மீண்டும் குடித்துக் கொண்டு இருக்கிறார். பழ முயற்சிகள் செய்தும் நாயகன் கஜேஷ் குடியை விடுவதாக தெரியவில்லை. 

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் நாயகி ரித்விகா ஸ்ரேயாவின் மாமாவாக இருக்கும் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி ஆகிய மூன்று பெண்களை திருமணம் செய்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார். மொட்டை ராஜேந்திரன்  ஏன் மூன்று பெண்களை திருமணம் செய்தார்?  காதலன் கஜேஷை திருத்துவதற்கு பல முயற்சிகள் செய்தும் கஜேஷ் திருந்தினாரா? இல்லையா? என்பதே உருட்டு உருட்டு படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : யுவராஜ் பால்ராஜ் 

பாடல் இசை : அருணகிரி

பின்னணி இசை : கார்த்திக் கிருஷ்ணன்

பாடல்கள் :  பெப்சி தாஸ், பாஸ்கர்

எடிட்டிங் : திருச்செல்வம்.

நடனம்  : தினா

விளம்பர வடிவமைப்பு : விஜய் கா. ஈஸ்வரன் 

மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ் 

தயாரிப்பு நிறுவனம் : ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்

தயாரிப்பாளர் : பத்ம ராஜு ஜெய்சங்கர்.

கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் பாஸ்கர் சதாசிவம்.