அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில், சமுத்திரகனி, பரத், ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ஆதர்ஷ், சித்தாங்கனா, ஐஸ்விகா, அரிஸ்டோ சுரேஷ், சித்திக் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் வீரவணக்கம்.
தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு கிராமத்துல செல்வந்தராக இருக்கிறார் பரத். கம்யூனிசவாதியாகவும் இருந்து வருகிறார்.
அந்த ஊரில் உள்ள ஏழை மக்களுக்கு பலவிதமான உதவிகளை செய்து வருகிறார். ஏழை பணக்காரன் தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்று எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகி வருகிறார்.
அப்படி இருக்கும் சமயத்தில் ஊரில் ஜாதி வன்கொடுமை பிரச்சனைகளில் பலர் பாதிக்கப்படுகின்றனர். அந்த மக்களுக்கு துணையாக இருக்கிறார் பரத்.
துணையாக இருப்பது மட்டுமல்லாமல் பிரச்சனைகளில் இருந்து எதிர்த்து போராட வேண்டும் என்று தைரியத்தை கொடுக்கிறார். அதற்காக அந்த மக்களை கேரளாவிற்கு அழைத்துச் சென்று 96 வயது உள்ள பெண்மணியான பிகே மேதினி அவர்களை சந்திக்க வைக்கிறார்.
பிகே மேதினி அவர்களும் புரட்சி வீரரான பி. கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கை பற்றியும், கேரளாவில் கம்யூனிசம் உருவானதை பற்றியும் விவரிக்கிறார்.
பி கிருஷ்ணபிள்ளையாக சமுத்திரகனி இருக்கிறார். அவர் என்ன மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டார்? மக்களை எவ்வாறு காப்பாற்றினார்? மக்களுக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தார்? மக்களை அடிமையாக வைத்திருந்தவர்களை என்ன செய்தார்? என்பதே வீரவணக்கம் படத்தோட கதை.
தொழில் நுட்ப கலைஞர்கள்
எழுத்து, இயக்கம் : அனில் V.நாகேந்திரன்
இசை : M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார்
ஒளிப்பதிவு : கவியரசு, சினு சித்தார்த்
எடிட்டிங் : பி. அஜித் குமார், அப்பு பட்டத்திரி
கலை இயக்கம் : கே. கிருஷ்ணன் குட்டி
இணை இயக்கம் : கே. ஜி. ராம் குமார்
ஒப்பனை : பட்டணம் ரஷீத்
சண்டைப் பயிற்சி : மாஃபியா சசி
பாடல்கள் : நவீன் பாரதி
உடைகள் : இந்திரன்ஸ் ஜெயன், ஜி.பழனி
சவுண்ட் டிசைன் : என். ஹரி குமார்
மக்கள் தொடர்பு : குணா, சதீஷ், சிவா (AIM)