சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் கிரியேஷன்ஸ், & ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் சார்பில், நாக வம்சி & சாய் சௌஜன்யா தயாரிப்பில், கௌதம் தின்னனூரி இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ், சத்ய தேவ், வெங்கடேஷ் வி.பி., அய்யப்பா பி. சர்மா, கோபராஜு ரமணா, மணீஷ் சவுதாரி, பாபுராஜ், மகேஷ் அச்சந்தா, ராஜ்குமார் காசிரெட்டி, அஜித் கோஷி, ரோகிணி, பூமி ஷெட்டி, ரவி கிருஷ்ணா, நவ்யா சுவாமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கிங்டம்.
நாயகன் விஜய் தேவரகொண்டா ஆந்திர மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருக்கிறார். தன்னுடைய சிறுவயதில் வீட்டை விட்டுப் போன தன்னுடைய அண்ணனை பல வருடங்களாக தேடி வருகிறார்.
விஜய் தேவரகொண்டாவின் அண்ணனைப் பற்றிய தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தகவல் கொடுக்கிறார்.
உன்னுடைய அண்ணனை நிமிர்க்க வேண்டும் என்றால் இலங்கையில் இருக்கும் ஒரு மிகப்பெரிய மாஃபியா கூட்டத்திற்குள் உளவாளியாக போக வேண்டும் ஆனால் அது மிகவும் ஆபத்தான வேலை என்றும் சொல்கிறார்.
அது எவ்வளவு ஆபத்தானதாக இருந்தாலும் பரவாயில்லை என்னுடைய அண்ணனை விட்டு அம்மாவின் முன்பு நிறுத்த வேண்டும் என்பதற்காக ரகசிய உளவாளியாக செல்வதற்கு சம்மதித்து அந்த மாபியா கூட்டத்திற்கு உளவாளியாக நுழைகிறார்.
ஆனால் அங்கு அவர் சென்றால் பலவித பிரச்சனைகள் ஏற்படுகிறது, மட்டுமில்லாமல் தன் அண்ணனை மட்டும் மீட்க வேண்டும் என்று சென்ற விஜய் தேவரகொண்டா அங்கு இருக்கும் மக்களையே மீட்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகிறார்.
ஒரு கட்டத்தில் அந்த இன மக்கள் அவரை கடவுளாக நினைக்கிறார்கள்.
விஜய் தேவரகொண்டா அந்த மக்களை மீட்டாரா? இல்லையா? விஜய் தேவர கொண்டாவிற்கும் அந்த இன மக்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை பல ஆக்ஷன் காட்சிகளோடு சொல்லி இருப்பதே கிங்டம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : அனிருத்
ஒளிப்பதிவாளர்கள் : ஜோமோன் டி ஜான் & கிரீஷ் கங்காதரன்
படத்தொகுப்பு : நவீன் நூலி
ஸ்டண்ட் இயக்குனர் : யானிக் பென், சேதன் & ரியல் சதீஷ்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவிநாஷ் கொல்லா
ஆடை வடிவமைப்பாளர் : நீரஜா கோனா பாடல் வரிகள் : சூப்பர் சுப்பு & விஷ்ணு எடவன்
வசனங்கள் : கே.என். விஜயகுமார்
நடனம் : விஜய் பின்னி
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்