அப்பீட் பிக்சர்ஸ் தயாரிப்பில், கௌதம் கணபதி இயக்கத்தில், பிக் பாஸ் தர்ஷன், முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், லால், சுஜித், பதினே குமார், அருள் டி சங்கர், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேஸ்வரன், கௌசிக் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சரண்டர்.
கேங்ஸ்டராக இருக்கும் கனகுவிடம் (சுஜித்) அமைச்சர் தேர்தலுக்காக பணத்தை கொடுத்து பிரித்துக் கொடுக்க சொல்கிறார். அமைச்சர் கொடுத்த 10 கோடி பணத்தை கனகு வில்லியம்ஸ் என்ற போலீஸ் அதிகாரியிடம் கொடுத்து அனுப்புகிறார்.
வில்லியம் சென்ற கார் விபத்துக்குள்ளாகி பணம் காணாமல் போகிறது. அந்த பணத்தை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார் கனகு.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் நாயகன் தர்ஷன் ட்ரைனிங் எஸ்.ஐ ஆக இருக்கிறார். அதே அதே காவல் நிலையத்தில் ஏட்டாக இருக்கிறார் லால்.
லால் கன்ட்ரோலில் இருக்கும் துப்பாக்கி காவல் நிலையத்திலிருந்து தொலைந்து போய்விடுகிறது.
அந்த துப்பாக்கி நடிகராகவே நடித்து இருக்கும் நடிகர் மன்சூர் அலிகானுடையது.
தேர்தல் சமயத்தில் கையில் எந்த ஆயுதங்களும் வைத்திருக்க கூடாது என்பதால் தேர்தல் முடியும் வரை காவல் நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைக்கிறார் மன்சூர் அலிகான்.
தேர்தல் நாளுக்குள் அந்த துப்பாக்கியை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற பரபரப்பான சூழ்நிலை ஏற்படுகிறது அந்த பொறுப்பை நாயகன் தர்ஷன் ஏற்றுக்கொள்கிறார்.
தர்ஷன் துப்பாக்கியை கண்டுபிடித்தாரா? இல்லையா? சுஜித் அமைச்சரின் பணத்தை கண்டுபிடித்து பட்டுவாடா செய்தாரா? இல்லையா? என்பதே சரண்டர் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : அப்பீட் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : வி.ஆர்.வி.குமார்
எழுதி இயக்கியவர் : கௌதமன் கணபதி
ஒளிப்பதிவு : மெய்யேந்திரன்
இசை & அசல் ஸ்கோர் : விகாஸ் பாடிசா
எடிட்டர் : ரேணு கோபால்
கலை இயக்குனர் : ஆர்.கே. மனோஜ் குமார்
ஸ்டண்ட் : அதிரடி சந்தோஷ்
நிர்வாக தயாரிப்பாளர் : ஆர்.செந்தில் குமார்
மக்கள் தொடர்பு : சதீஷ் (S2 மீடியா)
சரண்டர் படத்தில் மக்களும் சரண்டர்
ரேட்டிங் 3.5/5