பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில், உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா கலகேரி , சாந்திகா, பவன், தயா பனீர் செல்வம், ஸ்ரீதர், பிரபு ஸ்ரீனிவாஸ், பிரபு சாலமன், சங்கர் பாபு, ஜெயக்குமார், தீபா, சுபத்ரா, அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அக்யூஸ்ட்.
நாயகன் உதயா எம்எல்ஏ வை கொலை செய்த குற்றவாளியாக இருக்கிறார். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புழல் சிறையில் இருந்து சேலம்
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். உதயாவை அழைத்துச் செல்லும் காவலர்களில் கான்ஸ்டபிள் ஆக இருக்கும் அஜ்மலும் இருக்கிறார்.
சிறையில் இருந்து உதயாவை அழைத்துச் செல்லும் காவல்துறை வாகனத்தில் பிரச்சனை ஏற்பட, அரசு பேருந்தில் அழைத்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் உதயாவை கொலை செய்ய வேறு மாநிலத்திலிருந்து ஒரு கும்பல் துரத்துகிறது. அதுமட்டுமல்லாமல் இன்ஸ்பெக்டரும் உதயாவை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
அஜ்மல் உதயாவை காப்பாற்றி சேலம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க போராடுகிறார்.
ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் அஜ்மலையும் கொலை செய்ய முடிவு செய்கிறார்.
உதயா எதற்காக எம்எல்ஏ வை கொலை செய்தார்? அதற்கான காரணம் என்ன? குற்றவாளியாக இருக்கும் உதயாவின் கதை என்ன? அவரை துரத்தும் வெளி மாநில கும்பல் யார்? காவல் அதிகாரியே உதயாவை கொலை செய்ய நினைக்க காரணம் என்ன? என்பதே அக்யூஸ்ட் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : ஜெய்ஷன் ஸ்டுடியோஸ் அசோசியேட் வித் சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன், எம்ஐ ஸ்டுடியோ
தயாரிப்பாளர் : AL உதயா, “தயா” என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல்
கதை/திரைக்கதை/இயக்கம் : பிரபு ஸ்ரீனிவாஸ்
DOP : மருதநாயகம்.ஐ
இசை : நரேன் பாலகுமார்
எடிட்டர் : கே.எல் பிரவீன்
கலை இயக்குனர் : அனந்த் மணி
நடனம் : சந்திரிகா
ஸ்டண்ட் : “ஸ்டண்ட்” சில்வா
பாடல் வரிகள் : தேசா, ஹைட் கார்டி, பத்மஜா ஸ்ரீராம்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்