ஸ்ரீ பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி டியோல், கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ், நாசர், சத்யராஜ், ஈஸ்வரி ராவ், ரகு பாபு, தனிகெல்ல பரணி, முரளி ஷர்மா, சுனில், சுப்பராஜு, ஐயப்ப சர்மா, வெண்நெல கிஷோர், மக்ராந்த் தேஷ்பாண்டே, கபீர் பேடி, சச்சின் கேடேகர், கிங்ஸ்லி, ஆதித்யா மேனன், அனசூயா, பூஜிதா பொன்னாடா, கோவிந்த் நாம்தேவ் ஆகிய பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்துள்ள ஹரிஹர வீரமல்லு.
கதை 1600 ஆம் ஆண்டு நடக்கிறது. அடிமையாக உள்ள ஒரு சமூகத்தில் இருந்து, ஒரு குழந்தை ஆற்றோடு அடித்துச் செல்ல படுகிறது அந்த குழந்தையை சத்யராஜ் காப்பாற்றுகிறார்.
சத்யராஜ் இந்து மதத்தோட வரலாற்றையும் பெருமைகளையும் சொல்லித்தரும் குருகுலத்தை நடத்தி வருகிறார்.
ஆற்றில் இருந்து காப்பாற்றிய குழந்தையை தனது மகன் போல வளர்த்து வருகிறார்.
வருடங்கள் பல கழிகிறது, அந்த குழந்தையும் வளர அவர்தான் (விரமல்லு) பவண் கல்யாண். வீர மல்லு வைரங்களை திருடுவதை தொழிலாக வைத்துள்ளார். அதிலிருந்து வரும் பணத்தை வைத்து ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த செயல்கள் அங்கு இருக்கும் குறுநில மன்னர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் தெரிய வருகிறது.
இஸ்லாமியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டமது.
ஒளரங்கசீப் செங்கோட்டையில் தனியாக ஒரு அரசாங்கத்தை நடத்தி இஸ்லாம் மதத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்.
இந்து மக்களை பார்த்தாலே அவர்களை தாக்கிக் கொண்டே இருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒளரங்கசீப்பை தேடி செல்லும் சூழ்நிலை வீரமல்லுவிற்க்கு உருவாகிறது.
ஒளரங்கசீப்பை வீர மல்லு ஏன் தேடி செல்கிறார்? போகின்ற வழியில் என்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது? அதனை எப்படி வீரமல்லு சரி செய்தார்? இறுதியில் வீர மல்லும் ஒளரங்கசீப்பும் சந்தித்துக் கொண்டார்களா? இல்லையா? என்பதே ஹரிஹர வீரமல்லு படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : ஜோதி கிருஷ்ணா & கிருஷ் ஜகர்லமுடி
தயாரிப்பாளர் : ஏ. தயாகர் ராவ் தயாரித்தார்
இசை : ஆஸ்கார் விருது வென்ற கீரவாணி
மக்கள் தொடர்பு : ரேகா

