அட்றஸ் படத்திற்க்காக கவிஞர் சினேகன் எழுதிய புரட்சிகரமான பாடல்

அட்றஸ் படத்திற்க்காக கவிஞர் சினேகன் எழுதிய புரட்சிகரமான பாடல்.

மேகம் மூடிக்கொள்ளும்
வானம் தேடி செல்லும்
பூமி தலையில் தாங்கும்
எங்க ஊருடா…….
மலைகள் கூடி நிக்கும்
மரங்கள் ஆடி பாக்கும்
தென்றல் பாடி சொக்கும்
எங்க ஊருடா…
காடே வானவில்லால்
காட்டு பூ பூக்குது
காணக்தான் கண்ணு ரெண்டும் போதாதுடா…வெட்ட வெளியில வெள்ளி அருவியெல்லாம்
பசும்பால போலத்தானே கொட்டுதடா
(மேகம் மூடி கொள்ளும்)

சரணம் 1

தலையெல்லாம் பாரம்
மலையேறி போறோம் – ஆனாலும்
வாழ்க்கை ஒசரல…
மனம் பாறாங்கல் போல
மழை வெயில் பாத்து
மரத்து போச்சுதுல….
காட்டுக்குள் திரியும்
ரெண்டு கால் மிருகம்
நாட்டுக்குள் நடக்க வழியில்ல….
தாய்மடி போல
தாங்கும் மண்ணை – நீ
கூறு போட்டா சரியில்ல….
அடையாளம் வேணுமின்னு
அலைகின்ற உலகத்தில்
தெரியல்ல எங்க முகவரி….

(மேகம் மூடிக் கொள்ளும்)

சரணம் 2

யுத்தங்கள் இல்லை
ரத்தங்கள் இல்லை – ஆனாலும்
*~_அகதியா வாழுறோம்…
நாங்க நாடோடி இல்ல
ஓடோடி வாழ
நெஞ்சு பொறுக்கு தில்ல…

**எல்லை கோட்ட
எவண்டா போட்டான்?
கோட்ட தாண்டி
எவனும் வரல்ல…
நூறு சட்டம் நூறு திட்டம்
எதுவும் இங்க எட்டவில்ல….
தீவ போலத்தானே
ஒதுங்கி கிடக்குறோம்
தீர்வு தான்
எப்ப தெரியல்ல….?**
(மேகம் மூடிக் கொள்ளும்)