சட்டமும் நீதியும் வெப்சீரிஸ் விமர்சனம் ⭐⭐⭐⭐

பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், சரவணன், நம்ரிதா, அருள் டி சங்கர், சண்முகம், திருசெல்வம், விஜயஸ்ரீ & இனியா ராம் ஆகியோர் நடிப்பில் இன்று முதல் சீட் ZEE5 OTT தளத்தில் வெளியாகி உள்ள வெப்சீரீஸ் சட்டமும் நீதியும்.

நீதிமன்ற வாசலில் சாதாரண நோட்டரியாக புகார்களை டைப் செய்து கொடுக்கும் வேலை செய்து வரும் வழக்கறிஞரான சரவணனிடம் உதவியாளராக சேர நினைக்கிறார் நம்ரிதா.

ஆனால் சரவணன் நானே வழக்கு வாதம் இது எல்லாத்தையும் விட்டு விட்டு நீதிமன்றத்தின் வெளியே நோட்டரி ஆக இருக்கிறேன் என்னிடம் உதவியாளராக சேர்வது சரியாக இருக்காது என்று தவிர்க்கிறார்.

தன் மகளை காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் கொடுத்தும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால் நிம்மதி கிடைப்பதற்காக நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்திருந்து வருகிறார் ஒருவர். 

சரவணன் வீட்டில் சரவணன் மதிக்காமல் இருக்கிறார் அவர் மகன் நீ ஒரு கேசையாவது எடுத்து ஜெயித்து விடு என்று மகன் சொல்கிறார்.

அதனால் விரக்தியில் இருக்கும் சரவணன் யோசித்து நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவருக்காக கோர்ட்டில் ஆஜராகி நீதியை வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவுக்கு வருகிறார்.

அதற்காக, பொதுநல வழக்கு ஒன்றை தொடர்கிறார். அவருக்கு உதவியாளராக நம்ரித்தாவை அழைத்து கொள்கிறார்.

தீக்குளித்து இறந்தவரின்‌ மகள் கடத்தப்பட்டிருப்பதையும், அதற்கான புகாரை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி ஏற்க மறுத்ததையும் நீதிமன்றத்தில் சரவணன் தெரிவித்து பொதுநல வழக்கை ஹேபியஸ் கார்பஸ் வழக்காக மாற்றுகிறார்.

அந்தக் கடத்தப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிபதிகள் ஆணை பிறப்பிக்கிறார்கள். 

காவல்துறை ஒரு பக்கம் கண்டுபிடிக்க முயற்சி செய்ய அதே சமயத்தில் சரவணனும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஆனால் அந்தப் பெண் இருபது வருடங்களுக்கு முன்பே காணாமல் போனதாகவும் தீக்குளித்து இறந்த அந்த பெண்ணின் தந்தை மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வருகிறது. 

20 வருடங்கள் முன் காணாமல் போன பெண்ணை இப்பொழுது காணவில்லை என்று ஏன் புகார் அளித்தார்? போன்ற மேலும் பல சந்தேகங்களுடன் அடுத்தடுத்து  தொடர்களாக நீல்கிறது சட்டமும் நீதியும் வெப் சீரிஸ். 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : பாலாஜி செல்வராஜ்

தயாரிப்பாளர் : சசிகலா பிரபாகரன்

தயாரிப்பு : 18 கிரியேட்டர்ஸ்

ஒளிப்பதிவு : எஸ் கோகுலகிருஷ்ணன்

எடிட்டர் : ராவணன்

இசையமைப்பாளர் : விபின் பாஸ்கர்

கலை இயக்குனர் : பாவனா கோவர்தன்

பாடலாசிரியர் : ஸ்ரீனி செல்வராஜ்

மக்கள் தொடர்பு : சதீஷ் & சிவா (AIM)

ரேட்டிங் : ⭐⭐⭐⭐