கெவி விமர்சனம்

தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத், காயத்ரி, விவேக் மோகன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கெவி.

எந்தவிதமான சாலை வசதியோ, மருத்துவ வசதியோ இல்லாத ஒரு மலை கிராமத்தில் வாழ்கிறார் நாயகன் ஆதவன் அவரின் மனைவியாக ஷீலா.

தேர்தல் சமயத்தில் மட்டும் சந்திக்க வரும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்கிறார் அவர்களுடன் வந்த காவல்துறை அதிகாரிகளிடம் சண்டையிடுகிறார். அதனால் அவர் மீது கோபப்படும் அதிகாரி ஆதவனை பழி தீர்க்க நினைக்கிறார். 

ஒரு நாள் நிறை மாத கர்ப்பிணியான ஷீலாவை தனியாக விட்டுவிட்டு மலையை விட்டு கீழே இறங்கி பொருட்கள் வாங்க செல்கிறார். பொருட்களை வாங்கிவிட்டு திரும்பும் போது, அந்தப் பழி தீர்க்க நினைத்த அதிகாரியும் பிற காவலர்களும் ஆதவனை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். 

இது ஒரு புறம் இருக்க கர்ப்பிணி மனைவியான ஷீலாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. எந்த போக்குவரத்து வசதியும் இல்லாத அந்த மலை கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு ஷீலாவை அழைத்துச் செல்வதற்குள் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும் நிலைமை ஏற்படுகிறது. 

அவர்களை காப்பாற்ற ஊர் மக்கள் அனைவரும் போராடுகிறார்கள். 

இறுதியில் ஷீலாவும் குழந்தையும் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா? ஆதவன் அந்த அதிகாரியிடம் இருந்து தப்பினாரா? இல்லையா? என்பதை வலியுடன் சொல்லியிருக்கும் படமே கெவி.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : தமிழ் தயாளன்

இசை : பாலசுப்ரமணியன்.ஜி

தயாரிப்பு : மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி, ஜெகன் ஜெயசூர்யா

மக்கள் தொடர்பு : A ஜான்