பி மணிவர்மன் இயக்கத்தில், தமன் ஆக்ஷன், மாளவி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷ்காந்த், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா, யாசர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஜென்ம நட்சத்திரம்.
தமனும் மால்வி மல்கோத்தாவும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய நண்பர்கள் வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.
மால்வி மல்கோத்ரா கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில உருவங்களும் வருகிறது.
ஒரு நாள் இரவு அவர்கள் வீட்டிற்கு ரத்த காயங்களோடு வரும் காளி வெங்கட் பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் கோடிக்கணக்கான பணத்தை வைத்திருக்கிறேன் அதிலிருக்கும் பணத்தை எடுத்து உயிருக்கு போராடி வரும் என் குழந்தையை காப்பாற்றுங்கள் என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறார்.
அந்தப் பாழடைந்த தொழிற்சாலைக்கு தமன், மால்வி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் பணத்தை எடுப்பதற்காக செல்கிறார்கள்.
அங்கு சென்ற பிறகு மால்வி தன்னுடைய கனவில் பார்த்த உருவங்களை அங்கேயும் பார்க்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த இடத்தில் சாத்தானை வழிபட்டதற்கான தலயங்களும் அங்கு இருக்கிறது.
பணத்தை தேடிச் சென்ற நண்பர்களில் ஒவ்வொருவராக இறந்து விடுகிறார்கள் அதற்கு காரணம் என்ன? தமனும், மல்கோத்ராவும் என்னவானார்கள்? அங்கிருக்கும் ஆபத்து என்ன? ஆபத்திலிருந்து மீண்டர்களா? இல்லையா? என்பதை ஜென்ம நட்சத்திரம் படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : பி.மணிவர்மன்
இசை: சஞ்சய் மாணிக்கம்
சண்டை : மிராக்கிள் மைக்கேல்
எடிட்டிங் : குரு சூர்யா
ஒளிப்பதிவு : கே ஜி
தயாரிப்பு : அமோஹோம் ஸ்டுடியோஸ், வைட்லேம்ப் பிக்சர்ஸ் – சுபாஷினி.கே
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்