பறந்து போ விமர்சனம்

ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ்  பிரதர்ஸ் புரொடக்ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ராம், வி குணசேகரன், வி கருப்புசாமி, வி ஷங்கர் தயாரிப்பில், ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பறந்து போ. 

சென்னையின் நகர வாழ்க்கையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோரை எதிர்த்து கலப்பு திருமணம் செய்து வாழ்கிறார்கள் மிர்ச்சி சிவாவும் கிரேஸ் ஆண்டனியும். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் அவன் அன்பு (மிதுல்).

சிவா பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்யும் வேலையை செய்து வருகிறார் கிரேஸ் புடவைகள் விற்கும் கடை நடத்தி வருகிறார். 

இவர்கள் தங்கள் வருமானத்தில் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு மீதியில் கடனை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

மகன் அன்பிற்கு தேவையானதை வாங்கி கொடுத்தாலும் அவனுடன் நேரம் செலவழிக்க முடியாமலும் சரியாக கவனிக்க முடியாமலும் வேலை வேலை என்று இருக்கிறார்கள். 

இருவரும் வேலைக்கு செல்வதால் விடுமுறை நாட்களில் கூட வீட்டில் மகனை தனியாக விட்டு பூட்டி விட்டு வேலைக்கு செல்லும் நிலைமை உருவாகிறது.

கிரேஸ் கோவையில் கண்காட்சியில் புடவை கடை போடுவதற்காக சென்று விடுகிறார். அதனால் அன்பு வை சிவா தான் கவனித்துக் கொள்கிறார். டேய் டேய் செல்போனில் தொடர்பு கொண்டு மகனிடமும் கணவனிடமும் பேசுகிறார் கிரேஸ்.

அன்புக்கு (மிதுன்) நண்பர்கள் விளையாட வேண்டும் பெற்றவுடன் கைகோர்த்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். 

ஒரு கட்டத்தில் சிவாவை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு விளையாட செல்கிறான் அன்பு. 

இதனால் அன்புவே எங்கேயாவது வெளியில் கூட்டி செல்ல வேண்டும் என்ற முடிவெடுத்து அன்புவை இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்கிறார் சிவா.

தன்னுடைய பெற்றோர்களை பார்க்க அழைத்து போவது, பள்ளி தோழியை பார்ப்பது அன்பிற்குரிய நண்பர்களே அன்புவின் பள்ளி தோழியை பார்ப்பது, மலை ஏறுவது என்று செல்கிறார்கள்.

போகும் வழியில் அன்பு தன்னுடைய அப்பாவின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடச் சொல்லி என்னவெல்லாம் செய்கிறார்? அன்புவின் சில செய்திகளால் சிவாவும் கிரேஸும் என்ன பாடு படுகிறார்கள்? அன்பு மகிழ்ச்சியாக இருந்தானா? இல்லையா? என்பதை மிக இயல்பாக சொல்லி இருக்கும் படமே பறந்து போ.

தொழில்நுட்பக் குழுவினர்கள்

ஒளிப்பதிவு : என்.கே. ஏகாம்பரம்

படத்தொகுப்பு : மதி வி.எஸ்.

இசை : சந்தோஷ் தயாநிதி

பின்னணி இசை : யுவன் சங்கர் ராஜா

பாடல் வரிகள் : மதன் கார்க்கி

தயாரிப்பு வடிவமைப்பு : குமார் கங்கப்பன்

சண்டைப் பயிற்சி : ஸ்டண்ட் சில்வா

காஸ்ட்யூம் : சந்திரகாந்த் சோனாவனே

நடன இயக்குநர் : ரிச்சி ரிச்சர்ட்சன்

ஒலி வடிவமைப்பு : அருள் முருகன்

ஆடியோகிராசூஃபர் : எம் ஆர் ராஜகிருஷ்ணன்

கலரிஸ்ட் : ராஜசேகரன்

விஎஃப்எக்ஸ் : கார்த்திக் கம்பேட்டன்

ஸ்டில்​ஸ் : ஜெய்குமார் வைரவன்

ஒப்பனை : சசிகுமார் பரமசிவம், சுதி சுரேந்திரன்

விளம்பர வடிவமைப்பு : ட்வென்டி.ஒன்.ஜி,

உலகளாவிய வெளியீடு : ரோமியோ பிக்சர்ஸ்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்