சண்முகப்ரியன் இயக்கத்தில், விக்ரம்பிரபு, சுஷ்மிதா, மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லவ் மேரேஜ்.
உசிலம்பட்டியில் இருக்கும் விக்ரம் பிரபுவிற்கு 30 வயது கடந்த பிறகும் திருமணமாகாமல் இருக்கிறது. சொந்தக்காரர்கள் அனைவரும் எப்பொழுது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஊருக்குள் பெண் கிடைக்காததால் ஒரு வழியாக கோபிசெட்டிபாளையத்தில் பெண் அமைய அங்கு நிச்சயதார்த்தம் செய்வதற்காக அப்பா கஜராஜ், மாமா அருள்தாஸ், நண்பன் ரமேஷ் திலக் & குடும்பத்துடன் செல்கிறார்கள்.
சுஷ்மிதாவை பார்த்ததும் விக்ரம் பிரபுவிற்கு பிடித்து போய்விடுகிறது திருமணத்திற்கு ஓகே சொல்லி விடுகிறார். நிச்சயதார்த்தம் முடிந்து ஊருக்கு கிளம்பும் சமயத்தில் லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் அனைவரும் பெண் வீட்டிலேயே தங்குகிறார்கள்.
இங்கே தங்குவதால் கையோடு திருமணத்தை முடித்துவிட்டு ஊருக்கு சென்று விடலாம் என்று முடிவு செய்கிறார்கள். விக்ரம் பிரபுவும் ஓகே சொல்கிறார்.
ஆனால் அன்று இரவே சுஷ்மிதா காதலனுடன் வீட்டை விட்டு போய்விடுகிறார். இதனால் விக்ரம் பிரபு விரக்தி அடைந்து குடித்துவிட்டு புலம்பி கொண்டிருக்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்கிறார் சுஷ்மிதாவின் தங்கை.
கடைசியில் விக்ரம் பிரபுவிற்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே லவ் மேரேஜ் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : சண்முக ப்ரியன்
ஒளிப்பதிவு : மதன் கிறிஸ்டோபர்
இசை : ஷான் ரோல்டன்
படத்தொகுப்பு : பரத் விக்ரமன்
தயாரிப்பாளர்கள் : டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர்
தயாரிப்பு நிறுவனம் : ASSURE FILMS & RISE EAST
மக்கள் தொடர்பு : யுவராஜ்

