லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஜய் தீஷன், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, ராமசந்திரன், பிரிகிடா, தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மார்கன்.
ஒரு இளம் பெண்ணை காவல்துறை அவரின் வீட்டில் இருந்து பின் தொடர்ந்து செல்வதில் ஆரம்பம் ஆகிறது கதை.
அந்தப் பெண்ணை பின் தொடர்வதற்கான காரணம் ஃப்ளாஷ் பேக் ஆக விரிகிறது.
குப்பைத்தொட்டியில் இளம்பெண் ஒருவரின் கொலை செய்யப்பட்டு உடல் முழுவதும் கருமை நிறத்தில் மாறி கண்டெடுக்கப்படுகிறது. அதனை காவல்துறை விசாரித்து வருகிறது.
இந்த செய்தி செய்தித்தாளில் வர அதனை மும்பையில் இருக்கும் விஜய் ஆண்டனி பார்க்கிறார். விஜய் ஆண்டனி முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அந்த வழக்கை தான் விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கேட்கிறார்.
சென்னையில் இருக்கும் காவல் அதிகாரி சமுத்திரக்கனி அந்த வழக்கை விஜய் ஆண்டனிடம் அன் அபிஷியலாக ஒப்படைக்கிறார்.
இந்த வழக்கை விஜய் ஆண்டனி விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு காரணம் தன் மகளும் அதே முறையில் கொல்லப்பட்டதே.
அந்த கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் விஜய் ஆண்டனி சந்தேகத்தின் பெயரில் அஜய் தீஷனை கைது செய்கிறார்.
விசாரணையில் அஜய் தீஷன் மேல் தவறு இல்லை என்று தெரிந்தாலும், அவரிடம் இருக்கும் அபூர்வ சக்தியால் (திறமை) கொலையாளியை கண்டுபிடிக்க அவரின் உதவியை நாடுகிறார் விஜய் ஆண்டனி.
இறுதியில் விஜய் ஆண்டனி அஜய் தீஷனின் சக்தியால் கொலையாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மார்கன் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : லியோ ஜான் பால்
ஒளிப்பதிவு : யுவா
இசை : விஜய ஆண்டனி
தயாரிப்பு : விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்
தயாரிப்பாளர் : பாத்திமா விஜய் ஆண்டனி
மக்கள் தொடர்பு : ரேகா

