இந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார்.
மேலும், காடுதான் எல்லாமே என்று வாழ்ந்துவந்த ஜெயம் ரவிக்கு நகர வாழ்க்கை புதுமையாக தெரிகிறது. அதேபோல், மற்றவர்கள் பேசும் மொழியும் இவருக்கு வியப்பை கொடுக்கவே, அவர்களிடமிருந்து தனித்தே வாழ்கிறார். இதற்கிடையில், சாயிஷா காட்டுவாசிகளிடம் எப்படி பழகவேண்டும் என்று தெரிந்துகொண்டு ஜெயம் ரவியுடன் நட்பு வளர்க்கிறாள். நாளடைவில் ஜெயம் ரவி சாயிஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்.
இந்நிலையில், காணாமல்போன ஜெயம் ரவியை தேடி அந்தமான் காட்டு இலாகா அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். ஜெயம் ரவியை பிடித்துக்கொண்டு அந்தமான் செல்கிறார்கள். ஜெயம் ரவியை மீட்பதாக சாயிஷாவும் அந்தமான் போகிறார். போலீஸ் நிலையத்திலிருந்து தப்பிக்கும் ஜெயம் ரவி, சாயிஷாவை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்கிறார்.
அப்போதுதான் ஜெயம்ரவிக்கு அனைத்துமே ஞாபகத்துக்கு வருகிறது. காட்டில் அவர் பிறந்து வளர்ந்தது, அவருக்கென்று ஒரு கூட்டம் இருந்தது, கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் தங்களுடைய இருப்பிடத்தை அழிக்க நினைத்து தன்னுடைய ஆட்களை எல்லாம் காட்டை விட்டே துரத்தியது என அனைத்துமே அவருடைய நினைவில் வருகிறது.
சாயிஷாவை தன்வசம் வைத்துக்கொண்டு தன்னுடைய இனத்தை எப்படி கண்டறிந்தார்? கார்ப்பரேட் கம்பெனிக்காரர்களையும் எப்படி அங்கிருந்து விரட்டி அடித்தார்? என்பது படத்தின் மீதிக்கதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்