E5 என்டர்டைன்மென்ட் சார்பில், காமாட்சி ஜெயகிருஷ்ணன் இயக்கத்தில், விஜித் பச்சன், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், தீபா, கீதா கைலாசம், சுபத்ரா ராபர்ட், என்.பி.கே.எஸ்.லோகு, சாய் வினோத், வலீனா, ஹரிதா, பவா செல்லதுரை ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பேரன்பும் பெருங்கோபமும்.
50 வயதாக இருக்கும் நாயகன் விஜித் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். குழந்தையை கடத்தி விட்டதாக போலீஸ் இதுவரை கைது செய்கிறார்கள்.
காவல்துறையிடம் கைது செய்யப்பட்டு விஜித் கதையை சொல்கிறார். அதனை தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கிறார் காவல்துறை அதிகாரி செழியன் யார் இந்த விஜித் என்று.
விஜித் கிராமத்திற்கு சென்று விசாரணையை நடத்துகிறார். 25 வருடங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது அதனை ஃப்ளாஷ் பார்க்க நகருகிறது.
விஜித்து நண்பராக இருப்பவர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவராக இருக்கிறார் அந்த கிராமத்தில் இருக்கும் பெண்ணை காதலித்து அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு ஊரை விட்டு செல்கிறார் அதற்கு துணையாக இருக்கிறார் விஜித்.
அந்த கிராமத்திற்கு இந்த தகவல் தெரிய வர மொத்த கிராமமே சேர்ந்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊரின் தலைவர்களாக இருக்கும் ஐ எம் கோபி மற்றும் அவரது தம்பி அருள் தாஸ் இருவரும் அந்த பையனை எரித்து கொலை செய்து விடுகின்றனர்.
அந்தப் பெண் வலினாவையும் காதில் பூச்சி மருந்தை ஊற்றி பைத்தியமாக்கி விடுகிறார்கள். இந்த சம்பவத்திற்கு மொத்த கிராமமே உறுதுணையாக இருந்துள்ளது.
தன் மகன் தான் இவர்கள் ஓடி போவதற்கு காரணமாக இருந்தது தெரிய வந்தால் பிரச்சனையாகிவிடும் என்று தெரிந்து விஜித்தை கேரளா அருகேயுள்ள மாஹே என்ற ஊருக்கு அனுப்பி விடுகிறார் சுபத்ரா.
அங்கு வேலை பார்த்துக் கொண்டே நர்ஸிங் படிக்கிறார் விஜித். அதே கல்லூரியில் கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பெண்ணான நாயகி ஷாலியும் படிக்கிறார். நட்பாக பழகும் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
ஷாலியை திருமணம் செய்து விஜித் தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார்.
அவர்களை அவர்களின் தாயார் ஏற்க மறுக்கிறார்? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே பேரன்பும் பெருங்கோபமும் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : சிவபிரகாஷ்
இசை : இளவராஜா
ஒளிப்பதிவாளர் : ஜே.பி.தினேஷ்குமார்
ஆசிரியர் : ராமர்
கலை இயக்குனர் : சரவணன்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பாளர் : காமாட்சி ஜெயகிருஷ்ணன்
தயாரிப்பு : E5 என்டர்டைன்மென்ட்

